நாமக்கல் அடுத்துள்ள ராசிபுரத்திலிருந்து புதுப்பட்டி செல்லும் அரசு பேருந்து ராசிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. அப்போது பேருந்தில் பயணம் செய்த புதுப்பட்டியை அடுத்துள்ள ஊத்துதண்ணிக்காடு பகுதியைச் சேர்ந்த 65 வயதான மாசிலாமணி தன்னுடைய கழுத்திலிருந்த ஏழு பவுன் தங்கத் தாலியை காணவில்லை என கூச்சலிட்டார்.
இதனால் பேருந்தை ஓட்டுநர் ராமசாமி எங்கேயும் நிறுத்தாமல் ராசிபுரம் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றார். காவல் நிலையத்தில் புகார் அளித்த பின் காவல் துறையினர் அனைத்து பயணிகளையும், அவர்களிடம் இருந்த உடைமைகளையும் தீவிர சோதனை செய்தனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்த சோதனையில் தாலி கிடைக்காததால் மாசிலாமணியிடம், பேருந்தில் தாலி காணாமல் போனதா இல்லை வேறெங்கும் காணாமல் போனதா என்பது குறித்த விசாரணையை நடத்திவருகின்றனர்,
இதையும் படிக்க: சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உணவக உரிமையாளருக்கு சரமாரி கத்திக்குத்து!