சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ 50ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடுமையான கனமழையை தந்து, ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் இதுவரை இல்லாத அளவிற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்தார். சென்னையில் 13செ.மீ அளவிற்கு மழை பெய்தால் சென்னையே ஸ்தம்பித்து போகும். ஆனால், இம்முறை சில மணி நேரங்களில் வடிந்தது என்றால் முதலசைச்சரில் முன்னச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணமாகும்.
திருவண்ணாமலை நிலச்சரிவு மீட்பு பணியில் அமைச்சர்க எ.வ.வேலு, செந்தில் பாலாஜி, விழுப்புரத்தில் அமைச்சர் சிவசங்கர் பொன்முடி, கடலூரில் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், கிருஷ்ணகிரி, தருமபுரிக்கு அமைச்சர்கள் முத்துச்சாமி, இராஜேந்திரன் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக இருந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.
எதிர்க்கட்சி தலைவர் நினைவுக்கூற வேண்டும்: முதலமைச்சர் ரூ.2000 கோடி மத்திய அரசு நிவாரணம் வழங்க கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். சேலத்திற்கும், சென்னைக்கும் மட்டும் அரசியல் செய்யும் எதிர்க்கட்சி தலைவர் சாத்தனூர் அணை திறப்பு குறித்து பேசுகிறார். அவர் கொஞ்சம் திரும்பி பார்க்கவேண்டும்.
சென்னையில் பல உயிர்கள் பலியானது பல வீடுகள் சேமடைந்ததை அவர் நினைவு கூறவேண்டும். முன் அறிவிப்போடு தான் சாத்தனூர் அணை திறக்கப்பட்டது. பல உயிர்களை காப்பாற்றிய திராவிட மாடல் அரசிற்கு நன்றி தான் அவர் கூறியிருக்கவேண்டும். ஆனால் குறை சொல்கிறார்.
பொன்முடி மீது சேறு வீச்சு: விழுப்புரத்தில் குறிப்பிட்ட கட்சியின் மகளிர் அணியை சார்ந்தவர்கள் வேண்டுமென்றே சேற்றை அமைச்சர் பொன்முடி மீது வீசியுள்ளார்கள். இந்நிகழ்ச்சிக்கு பிறகும் அமைச்சர் பொன்முடி தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பணிகளை மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் இழப்பீடுகளை கணக்கிட்டு உரிய முறையில் வழங்குவார். சாத்தனூர் அணையை பொறுத்தவரை 5 முறை நீர் திறக்கும்போதும் தண்டோரா மூலமாகவும் ஆட்சியர் மூலமாகவும் நோட்டீஸ் வழங்கியுள்ளோம். இதற்கான குறிப்புகளை கையில் வைத்துள்ளோம்.
இதையும் படிங்க: "வணிகர்கள், வாடகைதாரர்களுக்கு 18% ஜிஎஸ்டி ஏற்புடையது அல்ல" - வணிகர் சங்கப் பேரவை மத்திய அரசுக்கு கோரிக்கை!
சென்னையில் மழைக்கு ஒருமாதத்திற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தோம். தன்னார்வலர்கள் ஆயிரக்கணாக்கானோர், மரஅறுவை இயந்திரம், நீர் உறிஞ்சும் இயந்திரம், படகுகளை நிறுத்தி வைத்திருந்தோம். இது தான் அரசின் நடவடிக்கைகள் உதாரணமாகும்.
வானிலை ஆய்வு மையத்திலும் முறையாக தகவல் பெறப்பட்டு, மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தான் நிலச்சரிவை தவிர்த்து பெரியளவில் உயிரிழப்புகள் இல்லை. திருவண்ணாமலையில் அம்மன் ஊர்வலங்கள் நேற்று துவங்கியது.
கடந்த முறையை விட 10%-20% கூட்டம் அதிகரிக்கும் அதற்கு ஏற்றார் போல் கிரிவலப்பாதையில் உள்ள பாதிப்புகள் சரிச் செய்யப்படும். ஏற்கனவே தமிழ்நாடு துணை முதல்வர் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. 6-7 தேதிகளில் மீண்டும் ஒரு ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு பேருந்து, இரயில், அடிப்படை வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு 40லட்சத்திற்கு அதிகமான மக்கள் கூடினாலும் வெற்றிக்கரமாக கார்த்திகை தீப விழா நடத்தப்படும்.
பெருமழை காலங்களில் நிலச்சரிவு ஏற்படவாய்புள்ள இடங்களில் உள்ளவர்களை வேறு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லவேண்டும் என முதல்வர் அவர்கள் கூறியுள்ளார்கள் வருங்காலங்களில் அது நடைமுறைப்படுத்தப்படும். வருங்காலங்களில் வானிலை ஆய்வுகளை மேலும் துள்ளியமாக கண்டறியும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுக்கும்.பேரிடர் காலங்களில் சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துகளை பதிவிடுவதை விடுத்து மக்களின் துயரில் பங்குகொள்ள வேண்டும்" என்றார்.