ETV Bharat / state

"காரை விட்டு இறங்கமாட்டீங்களா?.. மழை பாதிப்பை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு! - MINISTER PONMUDY

விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு பகுதியில் மழை வெள்ளப் பாதிப்பை பார்க்க சென்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது அப்பகுதி மக்கள் சேற்றை வாரி வீசினர். பின்னர் போலீசார் பாதுகாப்புடன் அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2024, 7:23 PM IST

விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 51 செ.மீ மழை பதிவானது என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மழையால் பாதிக்கபட்ட மாவட்டங்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவிகளையும், நிவாரண தொகையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

புயல் காரணமாக பெய்த கனமழையினால் தமிழகத்தின் சில நீர்நிலைகள் நிரம்பின. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், சாத்தனூர் அணை நிரம்பியது. 'இதனால் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் நள்ளிரவில் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டதால், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்ட மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்' என பாமக தலைவர் ராமதாஸ் குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டார்.

வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்ட பின் புறப்பட்டுச் செல்லும் அமைச்சர் பொன்முடி (Credits - ETV Bharat Tamilnadu)

இந்நிலையில், அணை திறக்கப்பட்டதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு பகுதியில் வெள்ளநீர் புகுந்ததால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது உடைமைகளை இழந்து தவித்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சாத்தனூர் அணை திறப்பு: 5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேலும், வெள்ள நீர் புகுந்ததால், தங்களை மீட்க யாரும் வரவில்லை என்று கூறி இருவேல்பட்டு பகுதி மக்கள் அருகே உள்ள விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலீசாரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தததால், அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வனத்துறை அமைச்சர் பொன்முடி சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது அமைச்சர் காரில் இருந்தபடியே மக்களிடம் குறைகளை கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த சிலர் , 'காரை விட்டு இறங்கமாட்டீர்களா?' எனக் கூறி, அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி வீசினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அமைச்சர் பொன்முடி போலீசார் பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.