ETV Bharat / bharat

சம்பல் பகுதிக்கு செல்ல உபி அரசு தடை....ராகுல் காந்தி செல்ல உரிமை உள்ளதாக காங்கிரஸ் பதில்! - LOP RAHUL GANDHI

உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் நேரிட்ட வன்முறையில் ஐந்து பேர் கொல்லப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செல்ல உள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி (Image credits-ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2024, 7:42 PM IST

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதிக்கு வரும் 4ஆம் தேதி செல்வதற்கு அரசியல் சட்டரீதியாக உரிமை உள்ளது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய உ.பி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், "ரேபரேலி மக்களவை தொகுதி எம்பி ராகுல் காந்தி மக்களவை எதிர்கட்சித் தலைவராகவும் உள்ளார். அவர் வரும் 4ஆம் தேதி சம்பல் பகுதிக்கு செல்கிறார். அங்கு அவர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்கிறார். அங்கு செல்வதற்கு அரசியல் சட்டரீதியாக அவருக்கு உரிமை உள்ளது,"என்றார்.

மேலும் பேசிய அஜய் ராய், "சம்பல் பகுதியில் மாநில காவல்துறை எதை மறைக்க விரும்புகிறது? யாரும் அங்கு செல்லக் கூடாது என்று ஏன் அவர்கள் தடுக்கின்றனர்? உத்தரபிரதேசத்தில் இது ஒரு பாணியாகவே கடைபிடிக்கப்படுகிறது. இதற்கு முன்பு ஹத்ராஸ், உன்னோவ், லக்கிம்பூர் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்றபோது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தடுக்கப்பட்டனர். இந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பான வழக்குகளிலும் எதிர்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என்று நிரூபணம் ஆகின. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலத்துக்கு சென்று அங்கு அமைதி நிலவ வேண்டும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். எனவே இங்கு செல்வதில் என்ன தவறு இருக்கிறது,"என்று கேள்வி எழுப்பினார்.

மேற்கு உத்தரபிரதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதிக்கு கடந்த 2ஆம் தேதி மாநில காங்கிரஸ் தலைவர் ராய் தலைமையின காங்கிரஸ் குழுவினர் சென்றனர். ஆனால், அவர்களுக்கு அங்கு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த சூழலில் சம்பல் பகுதிக்கு ராகுல் காந்தி செல்வது குறித்து மறுபரிசீலனை செய்யும்படி உபி போலீசார் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: ஃபெஞ்சல் புயல், மழை பாதிப்பு: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு!

இதே போல கடந்த நவம்பர் 30ஆம் தேதி சம்பல் பகுதிக்கு சென்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர்களும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய சஹாரன்பூர் காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத், "ராகுல் காந்தியை பார்த்து பாஜக அஞ்சுகிறது. எனவே, அவர் சம்பல் பகுதிக்குள் நுழைய விடாமல் உபி நிர்வாகம் தடுக்கும் என நினைக்கின்றேன். நாங்கள் எங்கள் தலைவருடன் சம்பல் பகுதிக்கு செல்வோம். ராகுல் காந்தி அரசியல் சட்ட ரீதியான பதவி வகிக்கிறார். எனவே அவரை உபி நிர்வாகம் தடுக்க முடியாது," என்றார்.

மேலும் பேசிய அவர், "மத ரீதியான கட்டமைப்புகள் மீதான நிலையில் மாற்றம் கூடாது என்று சட்டம் கூறுகிறது. ஆனால், கீழ் நீதிமன்றம் இதனை மீறி சர்வே நடத்த உத்தரவிட்டிருக்கிறது. முன்னாள் உ்சச நீதிமன்ற நீதிபதி வாய்மொழியாக கூறிய கருத்தின் அடிப்படையில் கீழ் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. ஆனால், நடைமுறையில் பதிவு செய்யப்பட்ட சட்டத்தை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். நீதிபதியின் வாய்மொழியான கருத்துகளை ஒரு விஷயமாக கருதமுடியாது,"என்றார்.

சம்பல் பகுதியில் மசூதி இருக்கும் இடத்தில் முன்பு கோவில் இருந்தது. எனவே அங்கு இந்துகள் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கீழ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பாபரால் 1526ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த மசூதியில் ஆய்வு மேற்கொள்ள கீழ் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து இந்த விஷயத்தில் கீழ் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.