நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள பிரபல ரிக் தயாரிப்பு நிறுவனமான பிஆர்டி நிறுவனம் 2,500 அடி ஆழம் வரை துளையிடக்கூடிய ஆட்டோ லோடர் ரிக் வாகனத்தை தயாரித்துள்ளது.
இந்த வாகனம் இந்தியாவிலேயே அதிக ஆழம் துளையிடக்கூடிய ரிக் வாகனம் ஆகும். மேலும் இந்த வாகனம் சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிஆர்டி நிறுவன மேலாண் இயக்குநர் பரந்தாமன், "இந்த வகை ரிக் வாகனங்களில், ரிக் ராடுகளை மனித முயற்சியால் தூக்கவோ, இணைக்கவோ தேவையில்லை.
அனைத்தும் சென்சார்கள் மூலமாகத் தானியங்கி முறையில் செயல்படுத்தலாம். 15 பேர் செய்யக்கூடிய வேலையை இந்த வாகனத்தினால் 4 பேரை மட்டுமே கொண்டு செய்யலாம். குறிப்பாக இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கேபினெட் ஃபிட்டிங் ரிக் இயந்திரம் பி.எஸ் 6 வகை இயந்திரமாகும்.
அதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாது. 50 விழுக்காடு நேரம், டீசல் மீதமாகும். இது 250 குதிரைத்திறன் கொண்ட ட்ரக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஆட்டோ லோடர் வாகனத்தில் 1,400 அடி முதல் 1,500 அடி வரை ஆழ்துளைக் கிணறு அமைக்கலாம். ஆனால், தற்போது இந்த வாகனத்தின் மூலம் 2,200 அடி முதல் 2,500 அடி வரை அமைக்க முடியும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சரக்கு ரயில் மூலம் காலி லாரிகளை கொண்டுச் செல்ல சோதனை