ETV Bharat / state

விதிமுறைகளை மீறிய அரசு மதுபான கடைகளுக்குச் சீல்! - நாமக்கல்: விதிமுறைகளை மீறி அடையாள அட்டை இல்லாமலும், தனி நபர்களுக்கு அதிகளவு மது விற்பனை செய்த 2 அரசு மதுபான கடைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாமக்கல்: விதிமுறைகளை மீறி அடையாள அட்டை இல்லாமலும், தனி நபர்களுக்கு அதிகளவு மது விற்பனையும் செய்த 2 அரசு மதுபான கடைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

விதிமுறைகளை மீறிய  2 அரசு மதுபான கடைகளுக்கு சீல்

author img

By

Published : May 7, 2020, 9:26 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி முதல் 168 அரசு மதுபான கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. மாவட்டத்தில் மதுபானம் வாங்க வருபவர்கள், பொருட்கள் வாங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட வண்ண அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையையும் கொண்டு வந்தால் மட்டுமே ஒரு பாட்டில் (750 மி.லி) மது வழங்க வேண்டும் என ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர், நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டு வரும் மதுபான கடைகளை இன்று ஆய்வு செய்தார். அப்போது சேலம் சாலையில் உள்ள தனியார் வங்கியின் மேல் மாடியில் செயல்படும் உயர்தர மதுபான கடை மற்றும் மதுபான கடை எண் 5911 ஆகியவற்றில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டை இல்லாமலும் அளவுக்கு அதிகமாக மது வழங்கியதும் தெரிய வந்தது.

விதிமுறைகளை மீறிய 2 அரசு மதுபான கடைகளுக்குச் சீல்

இதனையடுத்து 2 மதுபான கடைகளையும் மூடி, சீல் வைக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து 2 கடைகளையும் அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். மேலும் இதுபோன்று நீதிமன்ற விதிமுறைகளையும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத மதுபான கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் எச்சரித்தார்.

இதையும் படிங்க:

பற்றி எரிந்த அரசு மதுபான கடைகள் - பல லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் எரிந்து நாசம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.