ETV Bharat / state

நாமக்கல் அருகே வெறிநாய் கடித்து 15 பேர் படுகாயம்

நாமக்கல்: ராசிபுரம் அருகேயுள்ள சந்திரசேகரபுரத்தில் வெறிநாய் கடித்ததில் 15 பேர் படுகாயமடைந்துளளனர்.

nammakal district news  nammakal rasipuram Rabid dog issue  rasipuram rabid dog bite
வெறிநாய் கடித்து நாமக்கல் அருகே 15 பேர் காயம்
author img

By

Published : Sep 15, 2020, 10:20 PM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருந்துவந்தது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 15) சாலையில் சுற்றித்திரிந்த வெறிநாய் கடித்தத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு சேலம் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

வெறிநாய் கடித்து நாமக்கல் அருகே 15 பேர் காயம்

தெருநாய்கள் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டு வருவதாக கூறும் அப்பகுதி மக்கள், நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இனியாவது மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: பென்னிக்ஸை தேடியலைந்த அவரது வளர்ப்பு நாய் - காண்போரை நெகிழ வைத்த காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.