ETV Bharat / state

ஆற்றில் கழிவுநீர் கலப்பதைக் கண்டித்து இளைஞர் தலைகீழாக நின்று போராட்டம்!

வீரசோழன் ஆற்றில் சாக்கடை நீர் கலப்பதைக் கண்டித்து, அந்த சாக்கடை அருகிலே இருக்கும் ஆற்றினுள்ளே இறங்கிய இளைஞர், தலைகீழாக நின்று போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆற்றில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து இளைஞர் தலைகீழாக நின்று போராட்டம்!

author img

By

Published : May 26, 2022, 7:33 PM IST

மயிலாடுதுறை: காவிரியாற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான வீரசோழன் ஆறு, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி கடலில் கலக்கிறது. இந்த வீரசோழன் ஆற்றில் சங்கரன்பந்தல் என்ற இடத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புகளின் ’கழிவு நீர்’ முழுவதுமாக திறந்துவிடப்படுகிறது. இதனால், வற்றாத ஜீவநதிபோல் ’சாக்கடை நீர்’ நிரம்பி ஆறு போல ஓடிக் கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக, கொசுக்கள் உற்பத்தியாகி பலவித நோய்களும் ஏற்படுகின்றன. மேலும், நிலத்தடி நீரும் மெதுவாக, சாக்கடை நீராக மாறி வருகிறது. அதேநேரம், தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில் வீரசோழன் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, உடனடியாக குடியிருப்புகளின் கழிவுநீர், ஆற்றில் கலந்து வருவதைத் தடுக்க பொதுப்பணித்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் எனவும்; இலுப்பூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த கதிரவன் என்ற இளைஞர் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதனால், இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று (மே 26) காலை 8 மணி முதல் சாக்கடை நீருக்கு அருகில் இருக்கும் ஆற்றின் உள்பகுதியில், கதிரவன் தலைகீழாக சிரசாசனம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஆற்றில் கழிவுநீர் கலப்பதைக் கண்டித்து இளைஞர் தலைகீழாக நின்று போராட்டம்

இந்தப் போராட்டம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால், அப்பகுதியில் பொதுமக்கள் குவியத் தொடங்கினர்.

இந்நிலையில் அவ்வழியாகச் சென்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, இளைஞரிடம் போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தினார். மேலும், “உங்கள் போராட்டம் நியாயமானது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். இனிமேல் இதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது. இது தொடர்பாக அலுவலர்களை உரிய நடவடிக்கை எடுக்க ஆணையிடுகிறேன்” என மாவட்ட ஆட்சியர் லலிதா, கதிரவனிடம் கூறினார்.

இதனையடுத்து, போராட்டத்தை கைவிட்ட கதிரவனுக்கு சங்கரன்பந்தலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தலைகீழ் போரட்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மீனவப்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை - போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.