ETV Bharat / state

4 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றிய இளைஞர் கைது! - Latest Cr̥ime news

நாகை: மயிலாடுதுறை அருகே 4 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

youth-arrested-for-cheating-a-girl-for-4-years-in-the-name-of-marriage

author img

By

Published : Apr 19, 2020, 2:55 PM IST

Updated : Apr 19, 2020, 3:07 PM IST

நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா கொழையூர் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன் மகன் பிரவின்ராஜ் (23). இவர் மயிலாடுதுறையில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டிலிருந்த பெண்ணை 2017ஆம் ஆண்டிலிருந்து காதலித்துவந்துள்ளார்.

அவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறியுள்ளனர். அப்பெண் எப்போது திருமணம் செய்துகொள்ளலாம் எனக் கேட்டபோது, ஒரு வருடம் போகட்டும் என்று தள்ளிக்கொண்டே வந்துள்ளார்.

இதையடுத்து வசதி குறைந்த இடத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று பிரவின்ராஜ் பெற்றோரும் கூறிவிட்டதால், பிரவின்ராஜ் திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப்பெண் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றிய இளைஞர் கைது

தொடர்ந்து காவல்நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி விசாரணை மேற்கொண்டார். பிரவின்ராஜ் ஏமாற்றியது குறித்து விசாரணையில் தெரியவந்ததையடுத்து, உடனடியாகத் திருமணம் செய்துகொள்ள பிரவின்ராஜிற்கு அறிவுரை வழங்கினார்.

ஆனால் பிரவின்ராஜ் அறிவுரையை ஏற்றுக்கொள்ளாததால், ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி ஏமாற்றிய வழக்கில் கைதுசெய்யப்பட்டார்.

இதையும் படிங்க: கறி விருந்து வைத்த 'டிக் டாக் புள்ளிங்கோக்கள்' - பிணையில் விடுவிப்பு

Last Updated : Apr 19, 2020, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.