ETV Bharat / state

'பீமரத சாந்தி யாகம்' செய்த துர்கா ஸ்டாலின்!.. எதற்கு தெரியுமா?

70வது வயது பூர்த்தியான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நலம் வேண்டி அவரது மனைவி துர்கா ஸ்டாலின் திருக்கடையூர் கோயிலில் 'பீமரத சாந்தி யாகம்' செய்து வழிபாடு செய்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 7, 2023, 3:19 PM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீடூழி வாழ யாகம் நடத்திய துர்கா ஸ்டாலின்!

மயிலாடுதுறை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 70 வயது பூர்த்தியை அடுத்து அவரது பெயரில், மயிலாடுதுறை அருகே உலகப் புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயிலில் 'பீமரத சாந்தி யாகம்' செய்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின் இன்று (மார்ச்.7) வழிபாடு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான உலகப்புகழ் பெற்ற ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்த தலமாகும். ஆதலால், இது அட்ட விரட்ட தலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இதனால், இந்த கோயிலில் 60, 70, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வந்து சிறப்பு யாகங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபாடு செய்தால், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதனால், இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சிறப்பு யாகங்கள் செய்து சுவாமி மற்றும் அம்பாளை வழிபட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. இத்தனை சிறப்புமிக்க கோயிலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை தந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை மரியாதை செய்து வரவேற்றனர். தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற துர்கா ஸ்டாலின் கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ யாக பூஜைகளை செய்தார்.

மு.க.ஸ்டாலின் நீடூழி வாழ யாகம் நடத்திய துர்கா ஸ்டாலின்!

பின்னர் கோயிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து, அவரது ராசி நட்சத்திரம் சொல்லி அவரது பெயரில் பீமரத சாந்தி யாகத்தினை துர்கா ஸ்டாலின் நடத்தினார். ஹோமம் நடைபெற்ற நூற்றுக்கால் மண்டப வளாகத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

பீமரத சாந்தி யாகம் செய்த துர்கா ஸ்டாலின்!.. எதற்கு தெரியுமா?

பின்னர் அவர் கோயிலுக்குள் சென்று கள்ள வர்ண விநாயகர், ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி மற்றும் ஸ்ரீ அபிராமி அம்பாள் சந்நிதிகளில் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டார். முதலமைச்சர் மனைவி வருகையை ஒட்டி, திருக்கடையூர் கோயில் பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக அண்மையில் தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் கண்டார். இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உள்ளிட்டோர் ஆங்காங்கு கேக் வெட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.

குறிப்பாக, இந்த பிறந்த நாள் விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பிகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நிலையில், மு.க.ஸ்டாலினின் மனைவியான துர்கா ஸ்டாலின் தனது கணவருக்கு 70 வயது பூர்த்தியடைந்த நிலையில், அவருக்காக யாகம் செய்து வழிபாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'திராவிட மாடல்' எந்த அமைச்சருக்காவது அர்த்தம் தெரியுமா? - வைகைச்செல்வன் சவால்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.