ETV Bharat / state

'பெண்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் செய்துவரும் அதிமுக' - முதலமைச்சர் பெருமிதம்

author img

By

Published : Mar 7, 2020, 2:32 PM IST

நாகை: பெண்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் அதிமுக செய்துவருவதாக உலக மகளிர் தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

cm-edappadi-palanisamy
cm-edappadi-palanisamy

நாகை மாவட்டம் தனியார் கல்லூரியில் ஒன்றில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா, உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், கைத்தறித் துறை அமைச்சர் ஒ.எஸ். மணியன் உள்ளிட்ட பல அமைச்சர்கள் பங்கேற்றனர்.

அதில், எடப்பாடி பழனிசாமி கல்லூரி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விதைப்பந்து வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார். அதன்பின் விழாவில் பேசிய அவர், "மகளிர் தின நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உலகம் முழுவதும் நாளை கொண்டாடவிருக்கும் மகளிர் தின விழாவிற்கு வாழ்த்து்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நாட்டின் எதிர்காலமே பெண்கள் கையில்தான் உள்ளது. இந்தியாவில் ஓடும் அனைத்து நதிகளின் பெயர்களும் பெண்கள் பெயர்கள்தான். அவ்வளவு பெருமை பெற்றவர்கள் பெண்கள். ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வி பயின்று பல்வேறு பதவிகள் வகித்துவருகின்றனர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி

பெண்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் அதிமுக செய்துவருகிறது. அதன்மூலம் முதன்மை மாநிலமாகவும் திகழ்கிறது. பெண்கள் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் இருக்க வேண்டும்.

பெண்களுக்கென தாலிக்கு தங்கம், கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு, 13 லட்சம் பெண்களுக்கு குழந்தை பெட்டகம் என ஜெயலலிதா அரசு வழங்கிவருகிறது" என்றார்.

இதையும் படிங்க: வேட்டியை மடிச்சுக்கட்டி நாற்றுநட்ட முதலமைச்சர் பழனிசாமி! - விவசாயிகள் ஆரவாரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.