ETV Bharat / state

’மீண்டும் தமிழ்நாட்டின் சிறந்த பேரூராட்சியாக மாறும் தரங்கம்பாடி’ - சூளுரைக்கும் பேரூராட்சி நிர்வாகத்தினர்! - QR code smart card induced for trash

தமிழ்நாட்டில் தனித்து விளங்கும் தரங்கம்பாடி பேரூராட்சியை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தும் விதமாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் புதுமையான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர், பேரூராட்சி அலுவலர்கள். அந்த திட்டத்தின் கீழ் என்ன செய்யப்படுகிறது எனக் கேட்டால், கியூ.ஆர் கோடு (QR code) அட்டையை காண்பிக்கிறார்கள் பொதுமக்கள்...

தரங்கம்பாடி’
தரங்கம்பாடி’
author img

By

Published : Jul 5, 2020, 10:31 PM IST

Updated : Jul 6, 2020, 6:50 PM IST

சமீபத்தில், செய்தி நிறுவனமான ஈடிவி பாரத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவரின் பேட்டியைப் படிக்க நேர்ந்தது. அதில் பேசியிருந்த தூய்மைப் பணியாளர் சிவகாமி, “மக்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான், மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்துக் கொடுத்தால் போதும். இரண்டையும் ஒன்றாகக் கொடுப்பதால், நாங்கள் கைகளால் பிரித்தெடுக்கும் சூழலுக்குத் தள்ளப்படுகிறோம். நாங்களும் அவர்களைப் போலவே, ரத்தமும், சதையும் கொண்ட மனிதர்கள்தான். எங்களுக்கும் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்” என மிகவும் மென்மையான குரலில் பதிவு செய்திருப்பார். அவர்களுக்காவேனும் கழிவு மேலாண்மையில் நவீனத்துவம் வரவேண்டும் என அக்கணத்தில் தோன்றியது.

எவ்வளவு விஷயங்கள் இந்த தொழில்நுட்ப யுகத்தில் மாறியிருக்கும்போதும் கழிவு மேலாண்மை மட்டும் ஏன் பின் தங்கியிருக்கிறது? இந்த கேள்விக்கு ஓரளவு நியாயம் செய்யும்படி, செயல்பட்டிருக்கிறது நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சி.

தரங்கம்பாடி பேரூராட்சியானது 18 வார்டுகளில் 168 தெருக்களையும், பொறையார், சாத்தங்குடி, எருக்கட்டாஞ்சேரி ஆகிய 3 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியது. இங்கு சுமாராக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 6 ஆயிரத்து 25 வீடுகளில் வசித்து வருகின்றனர். சிறு, குறு என 452 வணிக நிறுவனங்களும் உள்ளன. இந்த பேரூராட்சியில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தூய்மைப்பணியாளர்கள் வீடுவீடாக சென்று சேகரித்துவருகின்றனர். இந்த குப்பைகள் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள வளம் பூங்காவில் தரம்பிரித்து உரமாக தயாரிக்கப்படுகிறது.

தரங்கம்பாடி பேரூராட்சி கடந்த 2014- 2015ஆம் ஆண்டில் ’தமிழ்நாட்டின் சிறந்த பேரூராட்சியாக’ தேர்ந்தெடுக்கப்பட்டது. இது தவிர 2018ஆம் ஆண்டு இந்திய அளவில் ஜல்சக்தி அபியான் திட்டத்தில் தேசிய நீர் விருது பெற்று இரண்டாம் இடத்தைத் தக்க வைத்தது

ஏற்கனவே தமிழ்நாட்டில் தனித்து விளங்கும் தரங்கம்பாடி பேரூராட்சியை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தும் விதமாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் புதுமையான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர், பேரூராட்சி அலுவலர்கள். இந்த திட்டம் பேரூராட்சி உதவி இயக்குநரின் அறிவுறுத்தலின் பேரில் செயல்படுத்தப்படுகிறது.

“மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளைத் தரம் பிரித்து பொதுமக்கள் அளிப்பதை உறுதிப்படுத்தவும், அனைத்து வீடுகளிலும் குப்பைகள் சேகரிக்கப்படுகிறதா எனக் கண்காணிக்கவும் கியூ.ஆர். கோடுடன் (QR code) கூடிய ஸ்மார்ட் கார்டு திட்டத்தை தமிழ்நாட்டில் முதல்முறையாக தரங்கம்பாடி பேரூராட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதற்காக முதல்கட்டமாக 600 வீடுகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கியிருக்கிறோம். இதன் மூலமாக குப்பை வழங்காத நபர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் குப்பைகளைத் தெருக்களில் கொட்டாமல் தவிர்க்கும் வண்ணம் அறிவுரை வழங்கிவருகிறோம்” என்கிறார் சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன்.

தரம் பிரித்த குப்பைகளில் இருந்து இயற்கையான முறையில் மண்புழு உரம் உள்ளிட்ட உரங்கள் தயாரிக்கப்படுகின்றது. இதன் மூலம் வருவாய் ஈட்டி மீண்டும் தன்னை சிறந்த பேரூராட்சியாக நிரூபித்துள்ளது, தரங்கம்பாடி.

“மக்கும் குப்பைகளில் தயாரிக்கப்படும் இயற்கை உரம் கிலோ ரூ.5 -க்கும், மண்புழு உரம் கிலோ ரூ.8 -க்கும், இறைச்சிக்கழிவு உரம் ரூ.10 -க்கும் என பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கப்படுகின்றது. பொதுமக்களுக்கு வீட்டிலிலேயே உரம் தயாரிப்பது குறித்தும் விளக்கப்படுகிறது. மக்காத பிளாஸ்டிக், இரும்பு, பாட்டில், அட்டைகள், பால், எண்ணெய் கவர்கள் போன்றவைகளை இனம் வாரியாக தரம் பிரித்து விற்பனை செய்தும் வருடத்திற்கு ரூ.2 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறோம்” என்கிறார் பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித்.

தமிழ்நாட்டின் சிறந்த பேரூராட்சியாக மாறும் தரங்கம்பாடி

குப்பைத் தொட்டிகள் இல்லாத பேரூராட்சியை உருவாக்கும் முனைப்பில் செயல்படும் தரங்கம்பாடி பேரூராட்சியில், "என் குப்பை என் பொறுப்பு" என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்க 46 பேர் அடங்கிய 3 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இவர்கள் மூலம் குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்க 19 தூய்மைப்பணியாளர்கள் சுகாதாரப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைகளில்லாத சுகாதாரமான பேரூராட்சியாக திகழ்ந்து தமிழ்நாட்டின் சிறந்த பேரூராட்சிக்கான விருதை மீண்டும் பெறுவோம் என்று சூளுரைக்கின்றனர் பேரூராட்சி நிர்வாகத்தினர்.

இதையும் படிங்க: கானல் நீரான காவிரி! - கிராம மக்களுடன் தூர்வாரி மீட்டெடுத்த ஊராட்சி மன்றத் தலைவர்!

Last Updated : Jul 6, 2020, 6:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.