ETV Bharat / state

'சாதி மோதலில் ஈடுபட மாட்டோம்' - 13ஆம் நூற்றாண்டின் சத்தியத்தை மீறாத வினோத கிராமம் - Mayuranathaswami Temple, Mayiladuthurai

நாகப்பட்டினம்: சாதி மோதலில் ஈடுபட மாட்டோம் என்று 13ஆம் நூற்றாண்டில் செய்த சத்தியத்தை இன்று வரை மீறாமல் வினோத கிராமம் ஒன்று ஒற்றுமையுடன் இருப்பது வியப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

caste conflict
author img

By

Published : Aug 20, 2019, 7:49 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருமங்கலம் கிராமத்தில் விக்கிரமசோழனால் கிபி 1118 - 1136ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட பூலோகநாத சுவாமி கோயில் உள்ளது. பஞ்ச திருமண தலங்களான திருக்குத்தாலம், திருவேள்விக்குடி, திருஎதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி வரிசையில் ஐந்தாவது தலமாக திருமங்கலம் இருந்து வருகிறது.

பல ஆண்டுகளாக சிதலமடைந்து காணப்பட்ட இக்கோயிலில், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கான திருப்பணி நடைபெற்றபோது, மண்ணில் புதைந்து கிடந்த தொன்மை வாய்ந்த கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கிராம மக்கள் அக்கல்வெட்டை எடுத்து கோயிலின் மகா மண்டபத்தின் வடபுறம் தரையில் நட்டு வைத்து பாதுகாத்து வருகின்றனர். இந்த கல்வெட்டை ஆய்வுக்கு உட்படுத்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் இது பற்றி நெகிழ்ச்சி மிகுந்த தகவலை தெரிவித்திருக்கின்றனர்.

சாதி மோதலில் ஈடுபடாமல் பழமையை மீறாத வினோத கிராமம்

அதாவது, 13ஆம் நூற்றாண்டின் இறுதியில், விருதராஜபயங்கரவளநாட்டுக்கு உட்பட்ட குறுக்கை நாடு, காளிநாடு, விளத்தூர் நாடு, மாந்துறை நாடு மற்றும் திருமங்கலம் நாடு ஆகிய 5 நாடுகளில், இடங்கை, வலங்கை என சாதிகள் அடிப்படையில் பிளவு ஏற்பட்டு, அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

இதையொட்டி, சுந்தரபாண்டியன் ஆட்சிகாலத்தில் 5 நாட்டு மக்கள் திருமங்கலம் பூலோகநாத சுவாமி கோயிலில் ஒன்றுகூடி, சந்திரன், சூரியன் உள்ள காலம் வரை சாதி மோதலில் ஈடுபட மாட்டோம் என்றும் அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் இந்த 5 நாடுகளுக்கும் அநியாயம் செய்தவர்களாக கருதப்படுவர் என்றும் முன்னோர்கள் சத்தியபிரமாணம் செய்துள்ளனர்.

இந்த முடிவை அரசின் ஆணைப்படி இங்கு கல்வெட்டாக பொறித்துள்ளனர். சாதி மோதலை தவிர்க்க கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த கல்வெட்டு வரலாற்று சிறப்பு மிக்கது என்கின்றனர் அக்கிராம மக்கள்.

இதுகுறித்து, அக்கோயிலின் அர்ச்சகர் மோகன் குருக்கள் பேசிய போது, பண்டைய காலத்தில் எடுத்துக்கொண்ட
சத்தியபிரமாணத்துக்கு உட்பட்டு, இப்பகுதி மக்கள் இன்றளவும் சாதி மோதல்களுக்கு இடம் தராமல் ஒற்றுமையாக உள்ளனர் என்று பெருமிதம் தெரிவித்தார்.

Intro:13-ஆம் நூற்றாண்டில் சாதி மோதலில் ஈடுபட மாட்டோம் என செய்த
சத்தியபிரமாணத்தை பல நூற்றாண்டுகளாக கடைபிடித்து ஒற்றுமையுடன் வாழும் மக்கள்:-
Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருமங்கலம் கிராமத்தில் விக்கிரமசோழனால்
கிபி 1118 -1136-ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட பூலோகநாத சுவாமி கோயில்
உள்ளது. பஞ்ச திருமண தலங்களான திருக்குத்தாலம், திருவேள்விக்குடி,
திருஎதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி வரிசையில் ஐந்தாவது தலமாக திருமங்கலம்
உள்ளது. பலஆண்டுகளாக சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோயிலில், 2019-ஆம் ஆண்டு
பிப்ரவரி 10-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கான திருப்பணி
நடைபெற்ற போது, மண்ணில் புதைந்து கிடந்த தொன்மை வாய்ந்த கல்வெட்டு ஒன்று
கண்டுபிடிக்கப்பட்டது.

கிராம மக்கள் அக்கல்வெட்டை எடுத்து கோவிலின் மகா மண்டபத்தின் வடபுறம்
தரையில் நட்டு வைத்து பாதுகாத்து வருகின்றனர். இந்த கல்வெட்டினை ஆய்வு செய்த
தொல்பொருள் ஆய்வாளர்கள், கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறியதாவது: 13-ஆம்
நூற்றாண்டின் இறுதியில், விருதராஜபயங்கரவளநாட்டுக்கு உள்பட்ட குறுக்கை நாடு, காளி
நாடு, விளத்தூர் நாடு, மாந்துறை நாடு மற்றும் திருமங்கலம் நாடு ஆகிய 5 நாடுகளில்,
இடங்கை, வலங்கை என சாதிகள் அடிப்படையில் பிரிவு ஏற்பட்டு, மோதல் நடந்துள்ளது.
இதையொட்டி, சுந்தரபாண்டியன் ஆட்சிகாலத்தில் 5 நாட்டு மக்கள் திருமங்கலம்
பூலோகநாத சுவாமி கோயிலில் ஒன்றுகூடி, சந்திரன், சூரியன் உள்ள காலம் வரை
சாதி மோதலில் ஈடுபட மாட்டோம் என்றும் அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் இந்த 5
நாடுகளுக்கும் அநியாயம் செய்தவர்களாக கருதப்படுவர் என்றும் சத்தியபிரமாணம்
செய்துள்ளனர். இந்த முடிவினை அரசின் ஆணைப்படி இங்கு கல்வெட்டாக
பொறித்துள்ளனர். சாதி மோதலை தவிர்க்க கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த
கல்வெட்டு வரலாற்று சிறப்பு மிக்கது என்கின்றனர். இதுகுறித்து, அக்கோயிலின்
அர்ச்சகர் மோகன் குருக்கள் கூறுகையில், அந்த காலத்தில் எடுத்துக்கொண்ட
சத்தியபிரமாணத்துக்கு உட்பட்டு, இப்பகுதி மக்கள் இப்போதும் சாதி மோதல்களுக்கு
இடம் தராமல் ஒற்றுமையாக உள்ளனர் என்றார்.

பேட்டி:
01, மோகன் குருக்கள் (திருமங்கலம் கோயில் அர்ச்சகர்)

02, கோ.முனுசாமி (தொல்பொருள் ஆய்வாளர்கள்)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.