ETV Bharat / state

'மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவை விவசாயிகளின் வீடு வீடாக கொண்டு சேர்ப்போம்'

நாகப்பட்டினம்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதாவை, விவசாயிகளின் வீடு வீடாக கொண்டு சேர்ப்போம் என நாகையில் நடைபெற்ற பாஜக விவசாய அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

'We will bring the Central Government's Agriculture Bill to the doorsteps of farmers'

author img

By

Published : Dec 15, 2020, 9:29 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், நாகை அடுத்துள்ள பனங்குடி கிராமத்தில் பாஜகவின் விவசாய அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (டிசம்பர் 15) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு பயனுள்ள வேளாண் சட்டம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும், வேளாண் சட்டத்தினால் விவசாயிகளுக்கு கிடைக்க கூடிய பலனை ஒவ்வொரு விவசாயிகளின் வீடுகளுக்கும் கொண்டு சேர்ப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது பேசிய பாஜக மாநில விவசாய அணி துணை தலைவர் சிவ காமராஜ், பிரதமர் மோடி கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க:யூடியூப்பில் வெளியான கொம்பு திரைப்படம் - சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.