நாகை மாவட்டம் வேட்டங்குடி ஊராட்சிக்குட்பட்ட தொடுவாய் மீனவர் கிராமத்தில் நான்கு வார்டுகளில் மொத்தம் 3000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். வருகின்ற 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், தொடுவாய் மீனவ கிராமத்திலுள்ள வார்டுகளை அலுவலர்கள் மறுவரையறை செய்தனர்.
மறுவரையறையில் நான்காவது வார்டிலுள்ள 624 வாக்குகளை தொடுவாய் மீனவர் கிராமத்திலிருந்து அருகிலுள்ள திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு மாற்றியுள்ளனர். திருமுல்லைவாசல், வேட்டங்குடி ஊராட்சிக்கு வெவ்வேறு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் போட்டியிடுவதால் மக்கள் வாக்களிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பஞ்சாயத்துத் தலைவர் தலைமையில் கிராமக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொடுவாய் மீனவர் கிராம மக்கள், நான்காவது வார்டிலுள்ள அனைத்து வாக்காளர்களையும் பழையபடி வேட்டங்குடி ஊராட்சிக்கு மாற்ற சம்பந்தபட்ட அலுவலர்களிடம் கோரிக்கை வைப்பதாகவும், கோரிக்கை நிறைவேறாவிட்டால் வருகிற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊராட்சி வார்டு பதவிக்கு குலுக்கல் முறையில் ஆட்கள் தேர்வு!