நடிகர் விஜய்யின் 48-ஆவது பிறந்த நாள் விழாவை மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இன்று(ஜூன்.22) கொண்டாடினர். இதையொட்டி மயிலாடுதுறையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகமான அன்பகம் காப்பகத்தில் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் காலை உணவு வழங்கினர்.
இதனை தொடர்ந்து, இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்ததால், இந்த காப்பகத்தில் 16 ஆண்டுகளுக்கு முன்பு சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் லட்சுமி என்ற மாணவி பிளஸ் டூ பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்ததை ஒட்டி, அம்மாணவியின் கல்லூரிப்படிப்புக்கான செலவினை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த விஜய் மக்கள் இயக்கத்தினர், முதற்கட்டமாக முதல் பருவத்துக்காக 5000 ரூபாய் காப்பக நிர்வாகிகளிடம் வழங்கினர்.
இதையும் படிங்க: வெளியானது 'வாரிசு' படத்தின் செகண்ட் லுக்; விஜய் பிறந்தநாளுக்கு அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்ஸ்!!