ETV Bharat / state

சந்தை அமைக்கத் தடை: வியாபாரிகள் சாலை மறியல்!

நாகை: வேளாங்கண்ணி அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சந்தையை மாவட்ட நிர்வாகம் மூடியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி விவசாயிகள், வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சந்தை அமைக்க தடை! வியாபாரிகள் சாலை மறியல்!

author img

By

Published : Jan 2, 2021, 8:18 PM IST

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூர் சொர்ணபுரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான பறவை என்ற இடத்தில் பல ஆண்டு காலமாக தினசரி காய்கறிச்சந்தை செயல்பட்டுவந்தது.

இந்தச் சந்தைக்கு வேளாங்கண்ணி, தெற்கு பொய்கை நல்லூர், வடக்கு பொய்கைநல்லூர், விழுந்தமாவடி, காமேஸ்வரம், பிரதாபராமபுரம், நாலுவேதபதி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருள்களை விற்பனை செய்துவந்தனர்.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக அந்தச் சந்தை மூடப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலையில் காலியாக இருந்த இடத்தில் தற்காலிகமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பழைய இடத்திலேயே சந்தை செயல்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு தற்காலிக இடத்தை அடைத்தது.

இது குறித்து தகவல் அறிந்த தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சித் தலைவர் மகேஸ்வரன் தலைமையில் விவசாயிகளும் வியாபாரிகளும் தற்காலிக இடத்திலேயே சந்தை செயல்பட அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்து நாகை - வேளாங்கண்ணி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

சந்தை அமைக்கத் தடை - வியாபாரிகள் சாலை மறியல்!

இது குறித்து, தகவலறிந்த சொர்ணபுரீஸ்வரர் செயல் அலுவலர் செல்வராஜ், டிஎஸ்பி முருகவேலு, திமுக மாவட்டப் பொறுப்பாளர் கௌதமன், எம்எல்ஏ மதிவாணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் எனத் தெரிவித்ததையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.