ETV Bharat / state

தெய்வ நம்பிக்கை இல்லாத முதலமைச்சர்; எப்படி குறைகளை சரி செய்யப் போகிறார் - வானதி சீனிவாசன் - cm without faith in God

தங்களுக்குத் தெய்வ நம்பிக்கை இல்லை என்று வெளிப்படையாகச் சொல்கின்ற முதலமைச்சர், அமைச்சர்கள் எப்படி இந்தக் குறைகளைச் சரிசெய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தெய்வ நம்பிக்கை இல்லாத முதலமைச்சர்
தெய்வ நம்பிக்கை இல்லாத முதலமைச்சர்
author img

By

Published : Dec 14, 2021, 9:56 PM IST

மயிலாடுதுறை: உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் ரூ.339 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (டிச.13) தொடக்கி வைத்ததன் காணொலி காட்சிகளை திருவாவடுதுறை ஆதீனத் திருமடத்தில், 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பராமாசாரிய சுவாமிகளுடன் பாஜக மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் பார்வையிட்டார்.

அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், "ஆக்கிரமிப்புகளில் உள்ள ஆதீனங்களின் சொத்துக்களை மீட்க மத்திய அரசு புதிய சட்டத்தைக் கொண்டுவர வாய்ப்புகள் இல்லை. சொத்துக்களைப் பாதுகாக்க ஆதீனங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்போம்.

திருவாவடுதுறை ஆதீனத் திருமடத்தில்
திருவாவடுதுறை ஆதீனத் திருமடத்தில் வானதி சீனிவாசன்

ஆன்மிகத்தைப் பழித்துப் பேசுகின்ற அரசியல்

தமிழ்நாட்டில், துரதிர்ஷ்டவசமாக ஆன்மிகத்தைப் பழித்துப் பேசுகின்ற அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக அரசியல் அதிகாரத்தில் உள்ளனர்.

இதன் காரணமாக, பல்வேறு கோயில்களில் சிலைகள், நகைகள் கொள்ளையடிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலேயே நூற்றுக்கணக்கான கோயில்கள் சீரமைக்கப்பட வேண்டியுள்ளது.

பாஜக மகளிரணி தேசியத் தலைவி வானதி சீனிவாசன்

தங்களுக்குத் தெய்வ நம்பிக்கை இல்லை என்று வெளிப்படையாகச் சொல்கின்ற முதலமைச்சர், அமைச்சர்கள் எப்படி இந்தக் குறைகளைச் சரிசெய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

எனவே, இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் நிர்வாகத்தைத் தெய்வ நம்பிக்கை உடையவர்களிடம் தனியாக வாரியம் அமைத்து கொடுக்க வேண்டும். அப்படி வந்தால்தான் அனைத்துக் கோயில்களுக்கும் விடிவுகாலம் பிறக்கும்.

திருவாவடுதுறை ஆதீனம் இல்லாவிட்டால்

தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ள கோயில்கள், அது தொடர்புடைய இடங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றைத் தமிழ், தமிழ் என்று பேசுகிற தமிழ்நாடு அரசாங்கம் உறுதுணையாக இருந்து ஆதீனங்களைக் காப்பாற்ற வேண்டும். திருவாவடுதுறை ஆதீனம் இல்லாவிட்டால் திருக்குறள் பதிப்பித்தல் நடக்காமல் போயிருக்கும்.

அதைச் சீரமைத்து ஒவ்வொரு அதிகாரமாகப் பதிப்பதற்காக உதவி செய்தது, தமிழ் ஓலைச் சுவடிகளை உ.வே. சாமிநாத அய்யர் கண்டுபிடித்துக் கொண்டு வந்ததற்கு உறுதுணையாக இருந்தது திருவாவடுதுறை ஆதீனம். தமிழுக்காக ஆதீனங்கள் செய்த தொண்டுகள் மறைக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் அரசாங்கம் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

சுவாமி நம்பிக்கை இல்லை

இன்று தமிழ் நாகரிகம், தமிழ்ப் பண்பாட்டுக் காலத்திற்குப் பழமையானது என்ற வகையில், பொருநை நாகரிகம் உள்ளது என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது பாராட்டுக்குரியது.

அந்த நாகரிகத்தில் ஆதீனங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. தமிழ்நாடு அரசுக்குச் சுவாமி நம்பிக்கை இல்லை என்பதால், ஆதீனங்கள் செய்த தமிழ்த் தொண்டுகளைப் புறக்கணிக்கக் கூடாது. தமிழ்நாடு அரசு யானைகள் புத்துணர்வு முகாமை தொடங்க வேண்டும்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவர் வெங்கடேசன், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் உள்ளிட்ட பாஜக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்தது திமுக தான்' - மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.