ETV Bharat / state

அனைத்து சமூக சிக்கலையும் கல்வி மூலம் மாற்றலாம் - வானவில் ரேவதி - வானவில் சிறப்புப் பள்ளி நாகப்பட்டினம்

நாகை: பொருளாதாரத்திலும் சமூகத்திலும் பின்தங்கியுள்ள மக்களின் வாழ்வை மாற்றும் வல்லமை கல்விக்கு உண்டு. அந்த வகையில் ஆதியன் இன (பூம்பூம் மாட்டுக்காரர்கள்) மக்களின் குழந்தைகளின் வாழ்வை மாற்றும் 'வானவில் ரேவதி'.

vaanavil
author img

By

Published : Oct 30, 2019, 10:22 PM IST

Updated : Nov 1, 2019, 9:56 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலை அடுத்த கீழக்கரை இருப்பில் அமைந்துள்ளது வானவில் உண்டு, உறைவிடப்பள்ளி. 'பூம்பூம் மாட்டுக்காரர்கள்' என்று கூறப்படும் ஆதியன் இன குழந்தைகளுக்கான இந்தத் தனி பள்ளியை நடத்திவருகிறார் ரேவதி.

பெரும்பாலும் பூம்பூம் மாட்டுக்காரர்களான ஆதியன் மக்கள் கல்வியறிவு பெறாமல் நாடோடிகளாகவே தங்களின் வாழ்வை நடத்துபவர்கள். இதனால் அவர்களின் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லாமல் பொதுமக்களிடம் யாசகம் கேட்டு வாழ்ந்துவருகின்றனர்.

Vaanavil school, வானவில் பள்ளி
வானவில் பள்ளி

ஒரு சிலர் கல்வி கற்க விரும்பினாலும், இவர்களுக்கு அரசு சான்றிதழ்கள் கிடைப்பதில்லை என்பதால் கல்வி என்பது இவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்த சூழலில் 2005ஆம் ஆண்டு உதித்ததுதான் இந்த வானவில் என்ற வண்ணப்பள்ளி!

சமூகத்தில் மிகவும் பின்தங்கியவர்களாக இருக்கும் நாடோடி சமுதாய மக்களை, படித்த பட்டதாரிகளாக உருவாக்க வேண்டுமென்பதைக் குறிக்கோளாக வைத்து, வானவில்லை உருவாக்கி வழிநடத்திச் சென்றுகொண்டிருக்கிறார் வானவில் ரேவதி.

Vaanavil school, வானவில் பள்ளி
கல்வி கற்கும் மாணவர்கள்

பத்திரிகையாளர், ஆவணப்பட இயக்குநர் என பன்முகங்களை கொண்டிருந்தாலும், அவற்றைவிட வானவில் பள்ளி மாணவர்களின் அக்காவாக தன்னை பெருமையுடன் அடையாளப்படுத்திக்கொள்கிறார் ரேவதி.

இச்சேவையை முன்னெடுக்க உந்துதலாக இருந்த சூழலை நம்மிடம் நினைவுகூரும் அவர், "2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தக்கூட ஆட்கள் இல்லை என நண்பர்கள் சொல்ல, அதனைக் கேட்ட மறுகணம் நானும் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னையிலிருந்து நாகைக்கு வந்தேன்.

வானவில் ரேவதி
வானவில் ரேவதி

சுனாமியால் கடலோர மீனவர் மக்கள் மட்டுமின்றி அவர்களுடன் சார்ந்து வாழும் பின்தங்கிய சமூக மக்களும் பெரும் பாதிப்பைச் சந்தித்திருந்தது புரிந்தது. உலகெங்கும் இருந்து உதவிகள் குவிந்தபோதும், 'ஆதியன்' என்று சொல்லக்கூடிய பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கும் நரிக்குறவர்களுக்கும் நிவாரண உதவிகள் கிடைக்காமலிருந்தன.

இந்த மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டுமெனில் கல்வி ஒன்றே அதற்கான வழி என்பதை அறிந்தேன். மேலும் நாடோடி சமூக குழந்தைகளால் மற்ற சமூக குழந்தைகளோடு இயல்பாகப் பழக முடியாது என்பதைப் புரிந்துகொண்டேன். அப்போது உதித்ததுதான் வானவில். அவர்களுக்கென தனி ஒரு பள்ளி" என்று தன் பெரும் பயணத்தை ரத்தினச் சுருக்கமாக விவரிக்கிறார்.

Vaanavil school, வானவில் பள்ளி
புத்தர்

குழந்தைகளின் பெற்றோருக்கே தங்கள் பிள்ளைகள் படிப்பார்கள் என்ற நம்பிக்கையில்லாமல் இருந்தபோதும், ரேவதி தனது முயற்சியில் எள்ளவும் பின்வாங்கவில்லை. ஆசிரியர்கள் மீதுள்ள பயத்தைப் போக்க பள்ளியின் சார்பில் சொந்தமாகச் சைக்கிள்கள் வாங்கி இங்குப் பயிலும் அனைவரும் அதை எடுத்துக் கொண்டு சுற்றி வரலாம் என்றும், வாரம் ஒரு சினிமா எனப் பல யுக்திகளைக் (அக்குழந்தைகளை உளவியல் ரீதியில் வலுவாக தயார்படுத்த) கையாண்டார்.

2005ஆம் ஆண்டு 25 குழந்தைகளைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த வானவில் பள்ளியில் தற்போது 160 குழந்தைகள் பயின்றுவருகின்றனர். இதுவரை இந்தப் பள்ளியிலிருந்து 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

அனைத்து சமூக சிக்கலையும் கல்வி மூலம் மாற்றலாம்

குழந்தையாக இருந்தபோது பிச்சையெடுத்த முருகம்மாள், தற்போது ஆசிரியர் பயிற்சி முடித்து இதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார் என மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் ரேவதி. இது மட்டுமின்றி பல கிராமங்களில் இரவு நேர வகுப்புகள் நடத்துவதன் மூலம் 1500 மாணவ, மாணவிகளுக்குக் கல்வி கற்பிக்கப்படுகிறது.

இருப்பினும் தமிழ்நாட்டில் இதுபோன்ற 13 மாவட்டங்களில் எண்ணற்ற ஆதியன் சமூக மக்கள் கல்வி வெளிச்சம் கிடைக்காமல் இருக்கிறார்கள். அரசும் தன்னார்வலர்களும் வானவில்லுடன் கைகோர்த்தால் அம்மக்களுக்கான கல்வியை முழுமையாகச் சாத்தியப்படுத்த முடியும் என்று கண்ணில் நம்பிக்கை மின்னப் படபடக்கிறார் வானவில் ரேவதி.

இதையும் படிங்க: அலையோடு போராடும் மீனவர்களுக்கு வருமானம் அள்ளித்தரும் கூண்டு மீன் வளர்ப்பு!

Intro:பொருளாதாரத்திலும், சமூகத்தாலும் பின்தங்கியுள்ள மக்களின் வாழ்வை மாற்றும் வல்லமை கல்விக்கு உண்டு. அந்த வகையில் ஆதியன் இன ( பூம்பூம் மாட்டுக்காரர்கள் ) மக்களின் குழந்தைகளின் வாழ்வை மாற்றும் அக்கா "வானவில் ரேவதி".

Body:பொருளாதாரத்திலும், சமூகத்தாலும் பின்தங்கியுள்ள மக்களின் வாழ்வை மாற்றும் வல்லமை கல்விக்கு உண்டு. அந்த வகையில் ஆதியன் இன ( பூம்பூம் மாட்டுக்காரர்கள் ) மக்களின் குழந்தைகளின் வாழ்வை மாற்றும் அக்கா "வானவில் ரேவதி". நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கலை அடுத்த கீழக்கரை இருப்பில் அமைந்துள்ளது "வானவில் உண்டு, உறைவிடப்பள்ளி". "பூம்பூம் மாட்டுக்காரர்கள்" என்று கூறப்படும் ஆதியன் இன குழந்தைகளுக்கான தனி பள்ளியை நடத்திவருகிறார் ரேவதி. பெரும்பாலும் பூம்பூம் மாட்டுக்காரர்களான ஆதியன் மக்கள் கல்வியறிவின்றி நாடோடிகள் போல தங்களின் வாழ்வை நடத்தி வருபவர்கள். இதனால் அவர்களின் குழந்தைகள் பள்ளியில் சென்று கல்வி பயிலாமல் பேருந்து நிலையங்கள், கோவில்கள் என மக்கள் கூடும் இடங்களில் ஊசி, மணி, ஸ்டிக்கர் என ஃபேன்சி பொருட்களை விற்பனை செய்வதும், பொது மக்களிடம் யாசகம் கேட்பதுமாய் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு சிலர் கல்வி பயில விரும்பினாலும் அவர்களுக்கான அரசு சான்றிதழ்களான இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்டவைகள் கிடைப்பதில் உள்ள சிக்கல்களால் கல்வி என்பது இவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்துவரும் சூழலில், இவர்களுக்காக 2005- ம் ஆண்டு உதித்தது வானவில் என்ற வண்ணப்பள்ளி. இப்பள்ளியில், கையில் பிரம்பேந்தி மண்டியிடச் சொல்லும் கறாரான ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நட்பு பாராட்டி , நல்லதொரு கல்விக்கு அடித்தளமாக திகழ்ந்து வருகிறது. சமூகத்தில் மிகவும் பின்தங்கியவர்களாக இருக்கும் நாடோடி சமுதாய மக்களை, படித்த பட்டதாரிகளாக உருவாக்க வேண்டுமென்பதை குறிக்கோளாக வைத்து, வானவில்லை உருவாக்கி வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார் பிரேமா ரேவதி யான தற்போதைய வானவில் ரேவதி. பத்திரிக்கையாளர், ஆவணப்பட இயக்குனர், திரைப்பட துணை இயக்குனர் என பன் முகங்களை கொண்டிருந்தாலும், அவற்றைவிட வானவில் பள்ளி மாணவர்களின் அக்காவாக அடையாள படுத்தப்படுவதில் பெருமைப்படுகிறார் ரேவதி. தற்போது முழு நேரமும் தன் பணியினை இந்தப் பள்ளிக்கு செலவு செய்து வருகிறார். இச்சேவையை முன்னெடுக்க உந்துதலாக இருந்த சூழலை நம்மிடம் நினைவு கூறுகிறார். "2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, லட்சக்கணக்கான உயிரிழப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தின் கடலோர மாவட்டமான நாகையில் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட் சேதத்தின் அளவு மிக அதிகம் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டிருந்தனர். அந்த சூழலில் இறந்தவர்களின் உடல்நிலை அப்புறப்படுத்த கூட ஆட்கள் இல்லை என நண்பர்கள் சொல்ல, அதனைக் கேட்ட மறுகணம் தானும் இயன்றதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னையிலிருந்து நாகைக்கு வந்தேன். சுனாமியால் கடலோர மீனவர் மக்கள்தான் பாதித்தது போன்ற எண்ணம் அனைவரிடத்திலும் ஏற்பட்டுருந்தது. ஆனால் நேரில் சென்று பார்த்தபோது நிலைமை வேராக காணமுடிந்தது. மீனவ மக்களுடன் சார்ந்து வாழும் பின்தங்கிய சமூக மக்களும் பெரும்பாதிப்பை சந்தித்திருந்தது புரிந்தது. உலகெங்கும் இருந்து பணம் மற்றும் பொருளுதவிகள் வந்து குவிந்த நிலையிலும், 'ஆதியன்' என்று சொல்லக்கூடிய பூம்பூம் மாட்டுக்காரர்கள் மற்றும் நரிக்குறவர்கள் அந்த நிவாரண உதவிகள் கிடைக்காமல் இருந்தன. முருகம்மாள் என்ற சிறுமி கையில் லக்ஷ்மி என்ற உடல் மெலிந்த நோஞ்சான் குழந்தையுடன் பிச்சை எடுத்து கொண்டிருந்ததை கண்டேன். அவளை விசாரிக்க, அவள் ஆதியன் சமூகத்தை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. லக்ஷ்மியை காப்பாற்ற வேண்டி மருத்துவம், ஊட்டச்சத்துள்ள உணவுகள் வழங்கியும் லட்சுமி இறந்துவிட்டாள். சத்தான உணவு கிடைக்காததால் ஒரு குழந்தை இறந்து போனது எனக்கு பெருத்த அதிர்வை ஏற்படுத்தியது. இந்த மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டுமெனில் கல்வி ஒன்றே அதற்கான வழி என்பதை அறிந்தேன். மற்ற சமூகத்தினருக்கு கல்வி குறித்து இருக்கும் சிறிய புரிதல் கூட இந்த ஆதியன் சமூக மக்களுக்கு இல்லை. இந்த தலைமுறையை கல்வி அறிவு உடையவர்களாக மாற்ற வேண்டும் என்று தோன்றியது. ஆதியன் இன குழந்தைகள் 10- க்கும் மேற்பட்டவர்களை அருகிலிருந்த அரசு பள்ளியில் சேர்க்க முயற்சியெடுக்க, இவர்களின் பின்தங்கிய வாழ்வியல் முறை மற்ற சமூக குழந்தைகளுடன் இணைந்து பயில்வதற்கு தடையாக இருந்தது. பள்ளிக்கூடங்களிலும் கூட தீண்டாமை தென்பட அவர்களை பள்ளியில் சேர்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. அது மட்டுமின்றி ஆதியன் மற்றும் நரிக்குறவர் ஆகிய நாடோடி சமூக குழந்தைகளால் மற்ற சமூக குழந்தைகளோடு இயல்பாக பழக முடியாது என்பதை புரிந்து கொண்டேன். அப்போது உதித்தது தான் வானவில். அவர்களுக்கென தனி ஒரு பள்ளி". அப்போது, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார் ரேவதி. வானவில் பள்ளியை துவங்க, அப்பணியை கைவிட்டார். பல போராட்டத்துக்கு இடையே, 2005 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 25 குழந்தைகளை கொண்டு வானவில் பள்ளியை தொடங்கி , ஆறு மாதம் மட்டும் இக்குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியும் மற்றும் பொதுச் சமூக பழக்க வழக்கத்தை புகட்டி விட்டு, அவர்களை அரசு பள்ளியில் சேர்த்துவிட்டு பள்ளியை மூடி விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தார் ரேவதி. பிச்சை எடுத்து வரும் பணத்தில், சினிமா பார்த்து பொழுதை கழித்து வந்த குழந்தைகளை, படிக்க அழைத்து வருவதில் பல சிக்கல்களை சந்தித்தார். அந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகள் படிப்பார்கள் என்ற நம்பிக்கையின்றி, ரேவதி மீது அனுதாபப்பட்டனர். இருப்பினும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டார் ரேவதி. பள்ளியில் ஆசிரியர் அடிப்பார் என்ற அச்சத்தை போக்கி, பள்ளிக்கூடம் போவதுபோல மகிழ்ச்சியான செயல் வேறொன்றும் இல்லை என்ற சூழலை அப்பள்ளியில் உருவாக்கினார். பள்ளிக்காக சொந்தமாக சைக்கிள்கள் வாங்கி, இங்கு பயிலும் அனைவரும் அதை எடுத்துக் கொண்டு சுற்றி வரலாம் என்றும், வாரம் ஒரு சினிமா என படிப்படியாக பள்ளியின் மீது இருந்த வெறுப்பை போக்கினார். கல்வியுடன் விளையாட்டு, இசை நாடகம், ஓவியம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒரு மாற்றுக் கல்வியை புகுத்தினார் ரேவதி. கல்வியறிவு இல்லாத ஒரு சமூகத்திலிருந்து , கல்வியறிவு பெற்ற முதல் தலைமுறையை இந்த வானவில் பள்ளி மூலம், இதுவரை 500 பிள்ளைகள் உள்ளனர் என்றும், தற்போது 160 பிள்ளைகள் இங்கு உணவு, உடை, இருப்பிடத்துடன் கல்வி பயில்வதாகவும், இது மட்டுமின்றி பல கிராமங்களில் இரவு நேர வகுப்புகள் நடத்துவதன் மூலம் 1500 மாணவ, மாணவிகளுக்கு கல்வி போதிக்க படுவதாகவும், இன்னும் எத்தனையோ குழந்தைகள் கல்வி அறிவு இல்லாமல் இருக்கிறார்கள் என்றாலும் எங்களால் இயன்ற குறுகிய பரப்பில் நிறைவாக செயல்பட்டு வருகிறோம் என்று கூறினார் ஆரம்பத்தில் குழந்தையை வைத்து பிச்சையெடுத்து இப்பள்ளிக்காண முதல் வித்தை உருவாக்கிய முருகம்மாள், தற்போது ஆசிரியர் பயிற்சி முடித்து இதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார் என மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் ரேவதி. இருப்பினும் எங்களுடைய பணி மட்டுமே போதாது. தமிழகத்தில் இதுபோன்ற 13 மாவட்டங்களில் எண்ணற்ற ஆரியன் சமூக மக்கள் கல்வி வெளிச்சம் கிடைக்காமல், அது குறித்த எந்த ஒரு விழிப்புணர்வும், அரசு அங்கீகாரம் கூட இல்லாமல் இருக்கும் சூழல் உள்ளது. அரசும், தன்னார்வலர்களும் வானவில்லுடன் கைகோர்த்தால் அம்மக்களுக்கான கல்வியை முழுமையாகச் சாத்தியப்படுத்த முடியும் என்கிறார் இந்த வானவில் ரேவதி.

Conclusion:
Last Updated : Nov 1, 2019, 9:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.