ETV Bharat / state

திமுகவினர் மிரட்டுவதாக ஒன்றிய கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு! - nagai district news

நாகை : மயிலாடுதுறையில் திமுகவினர் இடையிலான உள்கட்சி பூசல் காரணமாக, திமுக ஆதரவுடன் பதவி வகிக்கும் அதிமுக ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் பதவியைப் பறிக்க ஆதரவளிக்க கோரி திமுகவின் ஒரு தரப்பினர் மிரட்டுவதாக ஒன்றிய கவுன்சிலர்கள் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

dmk-of-intimidation-in-nagai
dmk-of-intimidation-in-nagai
author img

By

Published : Feb 21, 2021, 4:43 PM IST

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக உறுப்பினர்கள் 17 பேர் வெற்றி பெற்றனர். அதிமுக உறுப்பினர்கள் 5 பேரும் பாமக, காங்கிரஸ் கட்சிகள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றன. இதில், ஒன்றியக்குழுத் தலைவருக்கான போட்டியில் திமுக சார்பில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் எம்.மூர்த்தியின் மனைவி காமாட்சி, திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளைபெருமாளின் மனைவி ஸ்ரீமதி ஆகியோர் போட்டியிட்டு அதிமுக ஆதரவுடன் 14 வாக்குகள் பெற்று காமாட்சி மூர்த்தி வெற்றி பெற்று ஒன்றியக்குழுத் தலைவர் ஆனார். தொடர்ந்து நடைபெற்ற ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மகேஸ்வரி முருகவேல் திமுக ஆதரவுடன் 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதனால் திமுகவில் ஒன்றிய செயலாளர்களிடையே உள்கட்சி பூசல் ஏற்பட்டது. தொடர்ந்து, சில மாதங்களில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் எம்.மூர்த்தியின் பொறுப்பு பறிக்கப்பட்டு, அப்பொறுப்பில் இமயநாதன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இயமநாதனின் ஆதரவு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அதிமுக துணைத் தலைவர் மகேஸ்வரி முருகவேலை பதவியில் இருந்து அகற்ற தெற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி ஆதரவாளர்களிடம் கையொப்பத்துடன் கடிதம் கேட்டதால் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திமுகவினர் மிரட்டுவதாக ஒன்றிய கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த தெற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி ஆதரவு ஒன்றியக்குழு உறுப்பினர்களான ராஜேந்திரன், மும்தாஜ், காமராஜ், சிவக்குமார், கபிலன் ஆகிய ஐந்து பேர் தங்களிடம் கட்டாயப்படுத்தி கடிதம் கேட்கப்படுவதாகவும், கடிதத்தில் கையெழுத்திட மறுத்தால் கட்சி பொறுப்பில் இருந்து தங்களை நீக்கிவிடுவதாக மிரட்டுவதாகவும், ஒருசில ஒன்றியக் குழு உறுப்பினர்களின் கையெழுத்தினை போலியாக போட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டி கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:

'தமிழ்நாடு வெற்றி நடை போடவில்லை, வெத்து நடை தான் போடுகிறது' - ஸ்டாலின் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.