நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சியில் பாதாளசாக்கடை திட்டம் 2009ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை - கும்பகோணம் பிரதான சாலையான காமராஜர் வீதியல் உள்ள தனியார் பள்ளியின் முன்பு செல்லும் பாதாள சாக்கடை தொட்டியின் மூடி உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
இதனால் எந்த நேரத்திலும் அசம்பாவிதங்கள் நடைபெறும் என்பதால், மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இதுபோன்று பல இடங்களில் திறந்த நிலையில் பாதாள சாக்கடை தொட்டிகள் உள்ளதாகவும், நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.