ETV Bharat / state

மயிலாடுதுறையில் கைது: 8 மணிநேரத்துக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு - உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி பயணம்

மயிலாடுதுறை: கரோனா காலத்தில் கூட்டம் கூட்டியதாக மயிலாடுதுறையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் 8 மணி நேரத்துக்கு பின்னர் இரவு 11 மணியளவில் விடுவிக்கப்பட்டார்.

DMK youth wing seceratary Udhaynidhi stalin
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்
author img

By

Published : Nov 23, 2020, 8:56 AM IST

தமிழ்நாட்டில் 2021ஆம் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு "விடியலை நோக்கி - ஸ்டாலினின் குரல்" என்ற தேர்தல் பிரச்சார பரப்புரை பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அவர் பிரச்சாரத்தை மேற்கொண்டபோது ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டம் கூட்டியதாக நேற்று (நவ. 22) மதியம் 3 மணிக்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு திமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் திருமணம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து 8 மணி நேரத்துக்கு பின்னர், இரவு சுமார் 11 மணியளவில் ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார்.

முன்னதாக, உதய்நிதி ஸ்டாலின் 9 மணிக்கு மேலாகியும் விடுவிக்கப்படாததை கண்டித்து திமுக தொண்டார்கள் அவர் அடைத்து வைக்கப்பட்ட திருமண மண்டபத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக அரசு, காவல்துறையினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், என்னை கைது செய்யும் போது ஊரடங்கு கரோனா ஊரடங்கு காலத்தில் கூட்டத்தை கூட்டுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கு அமித்ஷா சென்னை வந்தபோது கூட்டம் கூடியது பற்றி கேட்டபோது அரசு விழா என்கிறார்கள். ஆனால் அரசு விழாவில் அரசியல் பேசியதுடன், பாஜக - அதிமுக கூட்டணி பற்றியும் உறுதிபடுத்தினார்கள். இவை அனைத்தையும் பொதுமக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

என்னை விடுவித்த பிறகு திட்டமிட்டபடி பிரச்சார பயணம் தொடரும் என்று கூறினார்.

இதையும் படிங்க: அரசு நிகழ்ச்சி என்பதை அமித் ஷா மறந்துவிட்டார் போல... திருநாவுக்கரசு விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.