நாகை: திமுக இளைஞரணி செயலாளர் சசிகலா குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி அவர் மீது பலரும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். அண்ணா திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் ஜெய்ஆனந்த், உதயநிதி ஸ்டாலினுக்கு வக்கீல் நோட்டீஸும் அளித்துள்ளார்.
இந்நிலையில் சசிகலாவை தரக்குறைவாக விமர்சித்து பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, மயிலாடுதுறை மாவட்டம் ஆனைமேலகரம் ஊராட்சி மல்லியம் கிராமத்தில் அண்ணா திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.ராஜா தலைமையில் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அண்ணா திராவிடர் கழகம், அதிமுக, அமமுக, பாமக ஆகிய கட்சியினர் மற்றும் கிராம மக்கள் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். உதயநிதியின் உருவபொம்மை கொளுத்தப்பட்டபோது, அதனை காவலர்கள் தடுத்து நிறுத்தியதை அடுத்து சிலர் அவரது புகைப்படத்தை எரித்தும், காலணியால் அடித்தும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இதையும் படிங்க: சிரித்தபடி நின்ற உதயநிதி; திடீரென முகத்தில் அடித்த பிளாஸ்டிக் பை!