நாகப்பட்டினம் மயிலாடுதுறை அடுத்த சீர்காழி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தஜோதி, அரசு பள்ளி தலைமையாசியர். இவரின் மனைவி சித்ரா (40). இவர் கடந்த வாரம் செப்.18 ஆம் தேதி விடியற்காலை வீட்டின் வாசலில் கோலம் போடுவதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது அங்குவந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவர் தலையில் பலமாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பலத்த காயமடைந்த சித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து, வழக்குப்பதிவு செய்த சீர்காழி காவல் துறையினர், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, சீர்காழி அருகே சட்டநாதபுரத்தைச் சேர்ந்த ரியாஸ் (26) என்பவரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சித்ராவின் வாடகை வீட்டில் இருக்கும் பிருந்தா என்ற பெண்ணிற்கும் ரியாஸுக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்துள்ளது. இதனை சித்ரா தட்டிக்கேட்டுள்ளார். மேலும், வீட்டை காலி செய்ய சொல்லித் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிருந்தா, ரியாஸ் இருவரும் சித்ராவை கொலை செய்ய திட்டமிட்டு, இரும்பு பைப்பால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும், சித்ராவை கொலை செய்ய ரியாஸுக்கு திட்டம் வகுத்து கொடுத்த பிருந்தாவையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு மீறிய உறவை தட்டிக்கேட்ட பெண் கொலை: இளைஞர் கைது!