ETV Bharat / state

மோடியின் தமிழ்நாடு கம்பெனிதான் எடப்பாடி அதிமுக - டிடிவி தினகரன் தாக்கு - modi

நாகை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மோடியின் தமிழ்நாடு கம்பெனி என்று டிடிவி தினகரன் மயிலாடுதுறையில் அமமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டபோது தெரிவித்தார்.

டிடிவி தினகரன்
author img

By

Published : Apr 12, 2019, 7:54 AM IST

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தமிழனை ஆதரித்து மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அதிமுக கட்சியே இல்லை. அது டெண்டர் நிறுவனம். மோடியின் தமிழ்நாட்டு கம்பெனிதான் எடப்பாடி அதிமுக. கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதி கேட்டும் உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாதவர் மோடி. முதலாளியாக இருக்கும் மோடி பணியாளராக உள்ள எடப்பாடியிடம் நிதியை எப்படி கொடுப்பார். பாஜக அதிமுகவை எதிர்க்கவில்லை; நம்மைதான் அதிகம் எதிர்க்கிறார்கள்.

டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை

சிறுபான்மையினர், கிறிஸ்தவ மக்களை ஏமாற்றி ஓட்டுப்பெறுவதற்காகதான் திமுக- காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. ஆனாலும் பாஜகவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் மறைமுக கூட்டணி அமைத்துள்ளார். இந்துக்கள் வாக்கு விழாமல் போய்விடுமோ என்ற பயத்தில்தான் நான் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். அரசியல்வாதிகள்தான் மதம் பிடித்து அலைகிறார்கள் யாரும் எந்த மதத்தையும் விமர்சிக்க வேண்டிய அவசியம் கிடையாது அவரவர்கள் பிடித்த மதத்தில் இருக்கிறார்கள். ஒற்றுமையுடன்தான் இருக்கிறார்கள். அரசியல் மதம் பிடித்தவர்கள்தான் பிரித்தாளும் சூழ்ச்சியால் கலவரத்தை ஏற்படுத்துகின்றனர்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அமைப்பதற்கும், மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு சிலை அமைக்கவும், மயிலாடுதுறை தொகுதியை ஆன்மிக சுற்றுலா மையமாக அறிவிப்பதற்கும், தலைஞாயிறு என் பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க எங்கள் தலைமையிலான ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றிக் கொடுப்போம். தமிழ்நாட்டை மதிக்காத மோடியையும், முதுகெலும்பில்லாத எடப்பாடி அரசையும் வீட்டிற்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது.

எடப்பாடி தலைமையிலான துரோக கூட்டணியையும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று ஏமாற்றும் கூட்டணியையும், தமிழ்நாடு மக்கள் புறக்கணிக்க வேண்டும். மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமைவதற்கும், மத்தியில் பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக நாம் மாறுவதற்கு பரிசுப்பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர் செந்தமிழனை வெற்றிபெறச் செய்யுங்கள்" என கேட்டு கொண்டார்.

Intro:எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அதிமுக கட்சியே இல்லை. அது டெண்டர் கம்பெனி மோடியின் தமிழ்நாட்டு கம்பெனிதான் எடப்பாடி அதிமுக என்று மயிலாடுதுறையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து டி டிவி தினகரன் பிரச்சாரம்:-

Body:மயிலாடுதுறை லோக்சபா தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தமிழனை ஆதரித்து மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் அமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பேசுகையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அதிமுக கட்சியே இல்லை அது டெண்டர் கம்பெனி. மோடியின் தமிழ்நாட்டு கம்பெனிதான் எடப்பாடி அதிமுக. கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதி கேட்டும் உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாதவர் மோடி. முதலாளியாக இருக்கும் மோடி பணியாளராக உள்ள எடப்பாடி நிதியை எப்படி கொடுப்பார். பாஜக அதிமுகவை கூட எதிர்க்கவில்லை நம்மை தான் அதிகம் எதிர்க்கிறார்கள் ஆனால் தான் நமக்கு ஒரே சின்னம் கொடுப்பதற்குக் கூட போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிறுபான்மையினர், கிறிஸ்தவ மக்களை ஏமாற்றி ஓட்டுப்பெறுவதற்காகதான் திமுக- காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. ஆனாலும் பாஜகவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் மறைமுக கூட்டணி அமைத்துள்ளார் இந்துக்கள் ஓட்டு விழாமல் போய்விடுமோ என்ற பயத்தில் தான் நான் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று கூறுகிறார். அரசியல்வாதிகளுக்கு எதற்கு மதம் ஜாதி மதத்தால் மக்களை பிளவுபடுத்த பார்க்கிறார்கள் அரசியல்வாதிகள் தான் மதம் பிடித்து அலைகிறார்கள் யாரும் எந்த மதத்தையும் விமர்சிக்க வேண்டிய அவசியம் கிடையாது அவரவர்கள் பிடித்த மதத்தில் இருக்கிறார்கள் ஒற்றுமையுடன் தான் இருக்கிறார்கள் அவர்களை அரசியல் மத பிடித்தவர்கள்தான் பிரித்தாளும் சூழ்ச்சியால் கலவரத்தை ஏற்படுத்துகின்றனர். மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அமைப்பதற்கும், மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு சிலை அமைக்கவும். மயிலாடுதுறை தொகுதியை ஆன்மிக சுற்றுலாமையமாக அறிவிப்பதற்கும், தலைஞாயிறு என் பி கே ஆர் ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க எங்கள் தலைமையிலான ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றிக் கொடுப்போம் தமிழகத்தை மதிக்காத மோடியையும், முதுகெலும்பில்லாத எடப்பாடி அரசையும் வீட்டிற்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது. எடப்பாடி தலைமையிலான துரோக கூட்டணியையும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி என்று ஏமாற்று கூட்டணி அவர்களையும், தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும். மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைவதற்கும் மத்தியில் பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக நாம் மாறுவதற்கு பரிசுப்பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர் செந்தமிழன் வெற்றிபெற செய்யுங்கள் என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.