மயிலாடுதுறை : மாசி மகத்தன்று கடற்கரை, காவிரி ஆற்றங்கரை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது நன்மை பயக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
அந்த வகையில் கடந்த ஆண்டு கரோனா தொற்றின் தாக்கத்தால் மாசி மாத திருவிழா மற்றும் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்த அரசு தடை விதித்து இருந்த நிலையில் தற்போது தடை நீக்கப்பட்டுள்ளது.
புகழ் பெற்ற மயிலாடுதுறை மாவட்டம் காவேரி புஷ்கர துலாக்கட்டம் காசிக்கு இணையான இடமாகும். இங்கு காவிரியில் 12 புண்ணிய தீர்த்தங்களும், காசியைப்போன்று விஸ்வநாதர், கேதாரநாத் ஆலயங்களும் கரையிலேயே அமைந்துள்ளது.
இங்கு புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் அளிப்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த துலாகட்டத்தில் நீராடினால் தாங்கள் செய்த பாவங்கள் போக்கி விடும் என்பதும் ஐதீகம்.
![காவிரி துலா கட்டத்தில் ஏராளமனோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14491012_fdf.jpg)
இன்று(பிப்.17) மாசிமகத்தை முன்னிட்டு காவிரி துலா கட்டத்தில் வெளி மாவட்டம், வெளி ஊர்களில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும், புனித நீராடியும் வழிபாட்டனர்.
இருப்பினும் காவிரியாற்றில் குறைந்த அளவு தண்ணீர் சென்றதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையும் படிங்க: கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாக கடைகளுக்கு சீல் வைப்பு