மயிலாடுதுறை: சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் 50 ஆயிரம் கன அடி உபரி நீரானது கடலுக்குச் செல்கிறது. ஆற்றின் கரையோர கிராமமான சந்தைப்படுகை, திட்டுப்படுகை, வல்லம்படுகை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பசுக்கள் வழக்கம்போல் இன்று (நவ.12) ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டில் மேய்ச்சலுக்குச் சென்றன.
ஆற்றிலிருந்து அதிகப்படியான உபரி நீர் வெளியேறியதால், அங்கிருந்த 27 பசுக்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் மணல் திட்டில் சிக்கிக்கொண்டன.
இதனையறிந்த பசுக்களின் உரிமையாளர்கள் அவற்றை மீட்க கோரிக்கைவிடுத்தனர். கோரிக்கையின்பேரில் சீர்காழி காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் அடங்கிய மீட்புகக் குழுவினர் படகுகள் மூலம் பசுக்களை மீட்டனர். நீரின் வேகம் அதிகரித்துள்ளதால் ஒவ்வொரு பசுவாக மீட்டுக் கரை சேர்த்தனர்.
இதையும் படிங்க: கடல் சீற்றம்: டேனிஷ் கோட்டைத் தடுப்புச் சுவர் பாதிப்பு