ETV Bharat / state

பெரியாருடைய கொள்கைகள் தொடர்ந்து ஒலிக்கப்பட வேண்டியது அவசியம் - அமைச்சர் சிவசங்கர்

பெரியாருடைய கொள்கைகள் தொடர்ந்து ஒலிக்கப்பட வேண்டியது அவசியம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சீர்காழியில் பேட்டியளித்துள்ளார்.

author img

By

Published : Jan 29, 2023, 10:41 PM IST

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சீர்காழியில் பேட்டி

மயிலாடுதுறை: சீர்காழியில் தனியார் திருமண மண்டபத்தில் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார். விழாவில் சிந்தனையாளன் பொங்கல் மலர் 2023 வெளியிடப்பட்டது.

துணைப் பொதுச் செயலாளர் முத்து, அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாநிலங்களுக்கு மாநில அரசு அதிகாரம் வேண்டும், காவிரிப் படுகை சிறப்பு வேளாண் மண்டலம் அமைத்தல் வேண்டும், வேளாண் விளைபொருள்களுக்கு நல்ல விலை வேண்டும், காவிரி பூம்புகார் தொல்லாய்வு வேண்டும், மீனவ மக்களின் நலன் காக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விழாவில் பங்கேற்ற போக்குவரத்து துறை சிவசங்கர் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, ’தந்தை பெரியார் கொள்கைகளை வழங்கி வந்தவர் ஆணை முத்து அவர்கள். அவர் கடந்து வாழ்ந்த பகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற படியால் அவர் ஆற்றிய பணியை வெளி உலகத்திற்கு எடுத்து செல்கின்ற இந்த பணியை கடமையாக கருதுகிறேன். பாசிச பாஜக அரசு, ஒரே நாடு ஒரே மதம் என்பதை முன்னெடுக்கின்ற இந்த வேலையில், இந்த மண்ணில் பெரியாருடைய கொள்கைகள் தொடர்ந்து ஒலிக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது.

இந்த வகையில் சனாதன கொள்கைகளை எதிர்த்து சமதர்மத்தை நிலைநாட்டவே இந்த விழாவில் பங்கேற்று இருக்கிறோம்’ எனத் தெரிவித்தார்.

‘ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகின்ற காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி அடையும், ஒரு முதலமைச்சராக கோட்டையில் அமர்ந்து பணி செய்து விட முடியும். அவ்வாறில்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று மக்கள் இடையே குறைகளைக் கேட்டு அறிந்து வருகிறார். தற்பொழுதும் களத்தில் முதலமைச்சர் என்கின்ற ஒரு பயணத்தை தொடங்கியுள்ளார். எனவே அவர் மக்களோடு முதலமைச்சராக திகழ்கிறார். அவரை குறித்து மக்கள் நன்கு அறிவார்கள்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கும்பக்கரையில் ஜில்லென ஒரு குளியல் போட்ட சுற்றுலாப்பயணிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.