ETV Bharat / state

குரூப் 4 தேர்வு - தாமதமாக வந்தவர்களை அனுமதிக்க மறுப்பு - அதிகாரிகளுடன் தகராறு - சீர்காழி தாசில்தார் செந்தில் குமாரையும் அவர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப் - 4 தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களை அனுமதிக்காததால் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

TNPSC-குரூப் 4 தேர்விற்கு தாமதமாக வந்த தேர்வர்களை அதிகாரிகள் அனுமதிக்கததால்  தகராறு

author img

By

Published : Jul 24, 2022, 1:46 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் குரூப் 4 தேர்வுக்காக 27 மையங்கள் அமைக்கப்பட்டு, அதில் 5799 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இன்று (ஜூலை 24) காலை தேர்வு தொடங்கிய நிலையில் சீர்காழி தென்பாதியில் உள்ள தனியார் CBSC பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு 50க்கும் மேற்பட்டோர் சில நிமிடங்கள் தாமதமாக வந்தனர். அவர்களை தேர்வு மைய அதிகாரிகள் தேர்வு எழுதுவதற்காக மையத்திற்குள் அனுமதிக்க மறுத்து விட்டார்.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் தங்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவேண்டும் எனக்கூறி தேர்வு மைய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

TNPSC-குரூப் 4 தேர்விற்கு தாமதமாக வந்த தேர்வர்களை அதிகாரிகள் அனுமதிக்கததால் தகராறு

அப்போது அங்கு வந்த சீர்காழி தாசில்தார் செந்தில் குமாரையும் அவர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேசிய தாசில்தார் 9 மணிக்குள் வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்ததால் தாமதமாக வந்த 50க்கும் மேற்பட்ட தேர்வு எழுத வந்தனர். அவர்கள் அதிகாரிகளை திட்டிக் கொண்டே , தேர்வு எழுத முடியாத விரக்தியில் திரும்பி சென்றனர்.

இதையும் படிங்க:குரூப்-4 தேர்வு - மாற்றுத் திறனாளி மாணவர் ஆர்வமுடன் பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.