மயிலாடுதுறை: தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு இன்று(நவ.4) நடைபெற்றது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள 29 கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு 2,119 பேர் தேர்வு எழுதினர். காலை 9.30 மணிக்கு தொடங்கி, 11 மணி வரை தேர்வு நடத்தப்பட்டது.
மயிலாடுதுறையில் தியாகி நராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற எழுத்துத் தேர்வை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கோட்டாட்சியர் யுரேகா, வட்டாட்சியர் மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து திறன் தேர்வு வரும் 15ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த திறன் தேர்வு வட்டாட்சியர் தலைமையில் கமிட்டி அமைத்து நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குழந்தைகள், பெண்களை பிச்சை எடுக்க வைத்தால் குண்டாஸ் - காவல்துறை எச்சரிக்கை!