ETV Bharat / state

தனிமாவட்ட கோரிக்கை: வணிகர் சங்கம் போராட்டம்

நாகை: மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

Solidarity demand: public struggle!
author img

By

Published : Jul 19, 2019, 7:56 AM IST

தென்காசி, செங்கல்பட்டு ஆகிய புதிய மாவட்ட அறிவிப்புகள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று வெளியிடப்பட்டன. நாகை மாவட்டம் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அரசின் இந்த அறிவிப்பு மயிலாடுதுறை கோட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை கோட்டத்தில், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளும், நான்கு தாலுகா, 5 ஒன்றியங்களும் உள்ளன. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சுமார் 9 லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய மயிலாடுதுறை கோட்டத்தை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

1866ஆம் ஆண்டு முதல் நகராட்சியாக இருக்கும் மயிலாடுதுறை, 150 ஆண்டு காலத்தை கடந்த நகராட்சியாகும். மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அரசின் அறிவிப்பு குறித்து, மயிலாடுதுறையில் சேம்பர் ஆப் காமர்ஸ், வர்த்தக சங்கத்தினர், விவசாய சங்கங்கள், மருத்துவர் சங்கம், வழக்கறிஞர்கள் சங்கம், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கும் வரையில் தொடர் போராட்டங்கள் நடத்துவது எனவும், முதல் கட்டமாக இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முழு கடையடைப்பு ;வணிகர்கள் அறிவிப்பு

அதன்படி, மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், பொறையாறு, வைத்தீஸ்வரன்கோயில், கொள்ளிடம் உள்ளிட்ட நகரங்களில் கடையடைப்பு நடத்துவது எனவும், பெட்ரோல் பங்க், மருந்துக்கடைகளையும் மூடப்போவதாக வணிகர்கள் அறிவித்துள்ளனர்.

Intro:மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி நாளை முழு கடையடைப்பு போராட்டம், பெட்ரோல்பங்குகள், மருந்துக்கடைகளையும் மூடப்போவதாக வணிகர்கள் அறிவிப்பு, தொடர் போராட்டம் நடத்த, அனைத்துக்கட்சி, வணிகர்சங்கங்கள், சேவை சங்கங்கள், வழக்கறிஞர் சங்கம், மருத்துவர் சங்கம், விவசாயிகள் சங்கம் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு:-Body:தென்காசி, செங்கல்பட்டு ஆகிய புதிய மாவட்ட அறிவிப்புகள் இன்று தமிழக சட்டசபையில் வெளியிடப்பட்டன. கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். நாகை மாவட்டம் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அரசின் இந்த அறிவிப்பு மயிலாடுதுறை கோட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை கோட்டத்தில், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளும், நான்கு தாலுகா, 5ஒன்றியங்களும் அமைந்துள்ளன. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சுமார் 9லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய மயிலாடுதுறை கோட்டத்தை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 1866ம் ஆண்டுமுதல் நகராட்சியாக இயங்கிவரும் மயிலாடுதுறை 150ஆண்டு காலத்தை கடந்த நகராட்சியாகும். மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று அரசின் அறிவிப்பு குறித்து, மயிலாடுதுறையில் சேம்பர் ஆப் காமர்ஸ், வர்த்தக சங்கத்தினர், விவசாய சங்கங்கள், மருத்துவர் சங்கம், வழக்கறிஞர்கள் சங்கம், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கும் வரையில் தொடர் போராட்டங்கள் நடத்துவது எனவும், முதல் கட்டமாக நாளை முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், பொறையாறு, வைத்தீஸ்வரன்கோயில், கொள்ளிடம் உள்ளிட்ட நகரங்களில் கடையடைப்பு நடத்துவது எனவும், பெட்ரோல்பங்க், மருந்துக்கடைகளையும் மூடப்போவதாக வணிகர்கள் அறிவித்துள்ளனர்.

பேட்டி : செந்தில்வேல் - மயிலாடுதுறை வர்த்தக சபை தலைவர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.