ETV Bharat / state

விபத்து ஏற்படுத்தும் வகையில் டிராக்டர் ஓட்டிய சிறுவன் !

நாகை : விபத்து ஏற்படுத்தும் வகையில் 16 வயது சிறுவன் டிராக்டர் ஓட்டியதால் கீழ்வேளூர் காவல் துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

விபத்து ஏற்படுத்தும் வகையில் டிராக்டர் ஓட்டியதால் பரபரப்பு !
author img

By

Published : Aug 6, 2019, 5:11 PM IST

நாகை மாவட்டம், புலியூர் சாலையில் 16 வயது சிறுவன் விபத்து ஏற்படுத்தும் வகையில் தாறுமாறாக டிராக்டரை ஓட்டியதால்,அவனை கீழ்வேளூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சௌந்தராஜன் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்தனர்.

அப்போது சிறுவனிடம் நடத்திய விசாரணையில், வாகனத்தின் உரிமையாளர் புலியூர் பகுதியைச் சேர்ந்த இங்கர்சால் என்பதும் வாகனத்திற்கு உரிய ஆவணம் இல்லாமல் ஓட்டி வந்ததும், சிறுவனுக்கு 16 வயது என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக டிராக்டரை பறிமுதல் செய்த கீழ்வேளூர் போலீசார் வாகனத்தின் உரிமையாளர் இங்கர்சால் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Intro:நாகையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் 16 வயது சிறுவன் டிராக்டர் ஓட்டியதால் பரபரப்பு ; வாகனம் பறிமுதல் ; வாகன உரிமையாளர் மீது வழக்கப்பதிவு.Body:நாகையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் 16 வயது சிறுவன் டிராக்டர் ஓட்டியதால் பரபரப்பு ; வாகனம் பறிமுதல் ; வாகன உரிமையாளர் மீது வழக்கப்பதிவு.

நாகை மாவட்டம், புலியூர் சாலையில் 16 வயது சிறுவன் விபத்து ஏற்படுத்தும் வகையில் டிராக்டரை ஓட்டி செல்வதாக காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து கீழ்வேளூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சௌந்தராஜன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கீழ்வேளூர் அருகே சிறுவன் ஓட்டி வந்த டிராக்டரை மடக்கி பிடித்தனர். அப்போது சிறுவனிடம் நடத்திய விசாரணையில் வாகனத்தின் உரிமையாளர் புலியூர் பகுதியை சேர்ந்த இங்கர்சால் என்பதும் வாகனத்திற்கு உரிய ஆவணம் இல்லாமல் ஓடி வந்ததும், சிறுவனுக்கு 16 வயது என்பதும் தெரியவந்தது. உடனடியாக டிராக்டரை பறிமுதல் செய்த கீழ்வேளூர் போலீசார் வாகனத்தின் உரிமையாளர் இங்கர்சால் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகையில் 16 வயது சிறுவன் சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் டிராக்டரை தாறுமாறாக ஓட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.