ETV Bharat / state

தமிழ்நாட்டை 2 சூரியன்கள் ஆள்கின்றன - தருமபுரம் ஆதீனம்; இந்தியாவில் எல்லோருக்கும் ஒரே கடவுள் சிவன் - ஆளுநர்! - தருமபுர ஆதீனம் வந்த ஆளுநர் ரவிக்கு ஒரு பக்கம் கறுப்புக்கொடி

தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து ஆளுநர் ஆர்.என். ரவி ஆசி பெற்றார்.

ஆளுநருக்கு தருமபுர ஆதீனம் புகழாரம்
ஆளுநருக்கு தருமபுர ஆதீனம் புகழாரம்
author img

By

Published : Apr 19, 2022, 4:23 PM IST

Updated : Apr 20, 2022, 10:12 AM IST

மயிலாடுதுறை: தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆசி பெற்றார். ஆளுநருக்கு தருமையாதீனம் நடராஜர் உருவச்சிலையை வழங்கினார். அதனையடுத்து தருமபுர ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை ஆளுநர் திறந்து வைத்தார். கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதீன மடாதிபதி மற்றும் ஆளுநர் பங்கேற்றுப் பேசினார்கள்.

தொடர்ந்து தருமபுர ஆதீனம் தெலங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கரம் விழாவில் பங்கேற்பதற்காக மேற்கொண்ட ஞானரத யாத்திரையை ஆளுநர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆளுநர் வருகையை முன்னிட்டு திருச்சி சரக ஐஜி மேற்பார்வையில் 2 வஜ்ரா வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தஞ்சை சரக டிஐஜி கயல்விழி தலைமையில் 1850 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக தருமபுர ஆதீனம் குருமகாசன்னிதானம் உரையாற்றுகையில் கூறும்போது, ”தருமபுர ஆதீன அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 800 மாணவர்கள் பயிலும் முதல் பள்ளியாக உள்ளது. தமிழ்நாடு ஆளுநரின் பெயர் ரவி. ரவி என்றால் சூரியன். ஆளுகிற ஆட்சியாளர்களின் சின்னமும் சூரியனாக உள்ளதால் தமிழ்நாட்டிற்கு இரண்டு சூரியன்கள் உள்ளன.

ஆளுநருக்கு தருமபுர ஆதீனம் புகழாரம்

மறதி ஒரு வரம். மறதி இருந்தால் மட்டுமே மனிதன் மகிழ்ச்சியாக வாழ முடியும். பசுக்களைப் பராமரிக்க வேண்டும். கால்நடைகளை சரியாக பராமரிக்காததால் கரோனா போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை நீக்கியதால் தான் பண்பாடு மற்றும் கலாசாரம் சீர் கெட்டுப் போயுள்ளது. அதனால் கல்வி நிலையங்களில் மீண்டும் நீதி போதனை வகுப்புகளை தொடங்க வேண்டும்’ என்றார்.

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பேசுகையில், ”இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதால் தருமபுரம் குருமகாசந்நிதானத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு உள்ளவர்களை பார்க்கும்போது உண்மையான இந்தியா என் கண்முன்னே தெரிகிறது. இந்திய நாடு வளமான நாடு. தருமபுர ஆதீனம் நாட்டு மக்களுக்கும் பல்வேறு சேவைகளை ஆற்றி வருவது சிறப்பிற்குரியது.

குறிப்பாக இக்கட்டான சூழ்நிலைகளில் கரோனா போன்ற இயற்கை இடர்பாடுகள், கார்கில் போர் நடைபெற்றபோது தாமாக முன்வந்து பல்வேறு உதவிகளை செய்தது பாராட்டுக்குரியது. இந்தியாவின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாமல் கலாசாரம், பண்பாடு, நாகரிகம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது.

உலகில் உள்ள மக்கள் இயற்கை இடர்பாடுகள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை அனுதினமும் சந்தித்து வருகிறார்கள். இதற்குத் தீர்வு நாகரிகம், கலாசாரம், கல்வி, நீதி போதனைகள், பண்பாடு உள்ளிட்டவற்றால் மட்டுமே நல்வழிப்படுத்த முடியும்’ என்றார்.

இந்தியாவில் எல்லோருக்கும் ஒரே கடவுள் சிவன் என்றும்; மதத்தால் மொழியால் உணவால் இந்தியர்கள் பிரிந்திருந்தாலும் அனைவரும் ஒரே குடும்பம் தான் என்றும் ஆளுநர் கூறினார்.

இந்தியாவினுடைய ஆன்மிகம் தமிழ்நாட்டிலிருந்து தொடங்கப்பட்டது என்றும்; அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார். முன்னதாக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த 96 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வருங்கால கணவரை, கண்ணாமூச்சி ஆட அழைத்து கழுத்தறுத்த பெண்!

Last Updated : Apr 20, 2022, 10:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.