புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள பிரபல நகைக்கடையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை காணவில்லை என அதன் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் காவல் துறையினர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சியை பார்த்தனர். பின்னர் விசாரணையில் நகை திருட்டில் ஈடுபட்டது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை சேர்ந்த கவிதா, அவருடைய மகன் கௌதம், கவிதாவின் சகோதரி சுதா ஆகிய மூவர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த காவல் துறையினர், ஒரு லட்சம் மதிப்பிலான நகை, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நகை திருடிய பெண் கைது!