மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு பிரியா பெரியசாமி (23) என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றிபெற்றார். தொடர்ந்து திமுக கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குத் தளவாட பொருள்கள் வாங்கும்போது ஊராட்சித் தலைவருக்கு ரோலிங் சேர் வாங்கியதற்குத் துணைத் தலைவர் அமலா ராஜகோபால் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பட்டியலின் பெண்ணுக்கு ரோலிங் சேரா? என்று சாதியைக் கூறி துணைத் தலைவரின் கணவர் ராஜகோபால் விமர்சித்ததாகவும், தொடர்ந்து ஊராட்சிக்கு வளர்ச்சித் திட்டங்கள் செய்வதற்கு உண்டான நிதியைப் பெறுவதற்கு கையெழுத்திட மறுப்பதாகவும் ஊராட்சித் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தன்னைக் கடமையைச் செய்யவிடாமல் தடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரியா பெரியசாமி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க:பட்டியலின ஊராட்சி தலைவருக்கு அவமரியாதை: செயலாளர், வார்டு உறுப்பினர் கைது!