ETV Bharat / state

பட்டினப்பிரவேச விவகாரம்: அரசு நல்ல முடிவினை எடுத்துள்ளது - திருவாவடுதுறை ஆதீனம் மகிழ்ச்சி! - தருமபுரம் ஆதீனம் பட்டணப்பிரவேச விவகாரம்

பட்டினப்பிரவேச விவகாரத்தில் அரசு நல்ல முடிவு எடுத்துள்ளது என திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமி தெரிவித்துள்ளார்.

Thiruvaduthurai Adheenam  pattinapravesham of dhamapuram adhinam  dhamapuram adhinam  pattinapravesham issue  pattinapravesham  Thiruvaduthurai Adheenam about pattinapravesham  Thiruvaduthurai Adheenam about pattinapravesham of dhamapuram adhinam  பட்டணப்பிரவேச விவகாரம்  திருவாவடுதுறை ஆதீனம்  தருமபுரம் ஆதீனம்  தருமபுரம் ஆதீனம் பட்டணப்பிரவேச விவகாரம்  பட்டணப்பிரவேச விவகாரம் குறித்து பேசிய திருவாவடுதுறை ஆதீனம்
திருவாவடுதுறை ஆதீனம்
author img

By

Published : May 8, 2022, 6:13 PM IST

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஆதீன குருமுதல்வர் குருபூஜையையொட்டி வருகின்ற 22ஆம் தேதி நடைபெறவுள்ள பட்டினப்பிரவேச நிகழ்வில் ஆதீன குருமகா சந்நிதானத்தை பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி கடந்த மாதம் 27ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான உக்தவேதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டைமண்டல ஆதீனம் 233ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அரசு நல்ல முடிவினை எடுத்துள்ளது - திருவாவடுதுறை ஆதீனம்

அப்போது, திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாவது, “பட்டினப்பிரவேசத்தில் மனிதரை மனிதர்கள் சுமக்கிறார்கள் என தற்போது சிலர் குறை கூறுகின்றனர். தாய் தனது குழந்தையை 10 மாதங்கள் கருவில் சுமக்கிறாள். சிவபெருமான் பிட்டுக்காக மண் சுமந்துள்ளார். பாணபத்திரருக்காக விறகு சுமந்துள்ளார்.

பட்டினப்பிரவேசம் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் மரபு. திருவாவடுதுறை ஆதீனத்தில் ஊர்ஊராகச்சென்றும் முற்காலத்தில் பட்டினப்பிரவேசங்கள் நடைபெற்றுள்ளன. தற்போது குருபூஜை தினத்தன்று ஒருநாள் மட்டும் 4 மணி நேரம் பல்லக்கு சுமக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு அரசு நல்ல முடிவை எடுத்துள்ளது.

திருவாவடுதுறை ஆதீனத்தில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற்ற பட்டினப்பிரவேசத்தில், பல்லக்கில் எழுந்தருள திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பல்லக்கில் ஏறவேண்டாம் எனத் தெரிவித்தனர்.

ஆனால், காலம்காலமாக கடைப்பிடிக்கப்படும் மரபை மாற்ற வேண்டாம். நாங்கள் பல்லக்கை தூக்குகிறோம் என பல்லக்கு சுமப்பவர்கள் கேட்டுக்கொண்டார்கள். நாங்கள் யாரையும் அடிமைப்படுத்தவில்லை. அவர்கள் தாய் குழந்தையை சுமப்பது போல, அவர்கள் தங்கள் குருவை தோளில் சுமக்கின்றனர்.

பல ஆதீனங்களின் இந்த மரபு நின்றுவிட்டது. ஆனால், தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கூடிப்பேசி நல்ல முடிவினை எடுத்துள்ளனர். இந்த பட்டினப்பிரவேசம் காலம் காலமாக தொடர்ந்து நடைபெறும்” என்றார்.

இதையும் படிங்க: பட்டினப் பிரவேசம் நடத்த அனுமதி- தருமபுரம் ஆதீனம் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.