ETV Bharat / state

திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவக்கம்! - tamilnews

நாகப்பட்டினம்: பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

காணிக்கை எண்ணும் பணி
காணிக்கை எண்ணும் பணி
author img

By

Published : Feb 12, 2020, 4:31 PM IST

பிரசித்தி பெற்ற திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் தனிச் சன்னிதியில் உள்ள சனீஸ்வர பகவானை தரிசிக்க சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனர்.

இங்கு சனீஸ்வர பகவான் சன்னிதி, நளன் கலிதீா்த்த விநாயகா் கோயில் உள்ளிட்ட சுமாா் 15 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கோயிலின் உண்டியல் நிரம்பிவிட்டாலோ அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறையோ உண்டியலை பிரித்து காணிக்கைகளை எடுத்து மூட்டை கட்டி பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு, பின்னா் ஒரு நாளில் காணிக்கை எண்ணுவதை கோயில் நிா்வாகம் வழக்கத்தில் கொண்டுள்ளது.

அதே போல், இந்த ஆண்டு தா்பாரண்யேசுவரா் கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் 5 உண்டியல்களை மட்டும் பிரித்து காணிக்கை எண்ணும் பணியானது அலுவலர் சுபாஷ் முன்னிலையில் கடந்த 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் பல்வேறு அரசுத்துறை அலுவலா்கள், கோயில் ஊழியா்கள் என சுமாா் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனா்.

ரூபாய் நோட்டுகள், நாணயம், தங்கம், வெள்ளி போன்ற பிற காணிக்கை பொருள்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகின்றன. காணிக்கை எண்ணுமிடத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் பொறுத்தப்பட்டு அனைத்தும் பதிவு செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும், கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சனீஸ்வர பகவான் கோயில் உண்டியல் காணிக்கை

மொத்தமுள்ள 12 உண்டியல்களில் இதுவரை 2 உண்டியல்கள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. இரண்டு உண்டியல்களில் இதுவரை சுமார் 22 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது எண்ணிக்கையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து எண்ணும் பணி நடைபெற்று வருகின்றது..

இதையும் படிங்க: ஒன்னுமில்லாத கட்சியை எந்த ஆலோசகர் வந்தும் வெற்றி பெற வைக்க முடியாது: கார்த்தி சிதம்பரம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.