ETV Bharat / state

தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் இல்லை!

நாகை: மயிலாடுதுறையில் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்பு வெளியான நிலையில், அதனை சரிவர நடைமுறைப்படுத்த முடியவில்லை என பெட்ரோல் சேமிப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்.

hemet
author img

By

Published : Aug 1, 2019, 10:36 AM IST

தமிழ்நாட்டில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு காவல் துறை அபராதம் விதித்துவருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்க, இனி தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பெட்ரோல் வழங்கப்படாது என்ற அறிவிப்பு பதாகைகளை வைக்குமாறு மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை உத்தரவின் பேரில் மயிலாடுதுறையில் நகரில் உள்ள அனைத்து பெட்ரோல் சேமிப்பு நிலையங்களில் அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டன.

வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கும் ஊழியர்கள்

இந்நிலையில், ஆகஸ்ட் 1ஆம் தேதியான இன்று அனைத்து பெட்ரோல் சேமிப்பு நிலையங்களிலும் வழக்கம் போல் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்பட்டது. தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது என்று கூறினால் தகராறு ஏற்படுவதாகவும், காவல் துறையினர் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே பேனர் வைத்ததாகவும், இதை நடைமுறைப்படுத்தக் காவல் துறையினர் பெட்ரோல் சேமிப்பு நிலையங்களில் பாதுகாப்பு வழங்கி ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்று பெட்ரோல் சேமிப்பு நிலைய ஊழியர்கள் கூறுகின்றனர்.

இந்த அறிவிப்பு குறித்து துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரையிடம் கேட்டபோது, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மயிலாடுதுறை நகரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து இந்த அறிவிப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Intro:மயிலாடுதுறையில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்பு பொய்யானது.. காவல்துறையினர் ஒத்துழைப்பு தராதால் நடைமுறைப்படுத்த முடியவில்லை என பெட்ரோல் பங்கு ஊழியர்கள் குற்றச்சாட்டு
Body:தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு காவல்துறை அபராதம் விதிக்கின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க, இனி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு ஆகஸ்ட் 1ம்தேதி முதல் பெட்ரோல் வழங்கப்படாது என்ற அறிவிப்பு பதாகைகளை வைக்குமாறு மயிலாடுதுறை டி.எஸ்.பி வெள்ளத்துறை உத்தரவின் பேரில் மயிலாடுதுறையில் நகரில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 1ம் தேதியான இன்று அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் வழக்கம் போல் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது என்று கூறினால் தகராறு ஏற்படுவதாகவும், காவல்துறையினர் கேட்டுகொண்டதன் பேரிலேயே பேனர் வைத்ததாகவும், இதை நடைமுறைபடுத்த காவல்துறையினர் பெட்ரோல் பங்குகளில் பாதுகாப்பு வழங்கி ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்று பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கூறுகின்றனர். இந்த அறிவிப்பு குறித்து டிஎஸ்பி வெள்ளதுத்துறையிடம் கேட்டபோது; ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மயிலாடுதுறை நகரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து இந்த அறிவிப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பால் பெட்ரோல் போடவரும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது.

பேட்டி : 1. முத்தையன், பெட்ரோல் ஊழியர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.