ETV Bharat / state

மயிலாடுதுறை: 1,000 ஆண்டுகள் பழமையான வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில் மேற்கூரை இடிந்தது

மயிலாடுதுறை அருகே 1,000ஆண்டுகள் பழமை வாய்ந்த வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலின் மேற்கூரை மண்டபம் மழை காரணமாக இடிந்து விழுந்துள்ளது.

மயிலாடுதுறை: 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில் மேற்கூரை மண்டபம் இடிந்தது

author img

By

Published : Oct 10, 2022, 7:11 AM IST

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா வழுவூரில், அஷ்டவீரட்ட தலங்களில் ஒன்றான வீரட்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டுமானங்களை உடைய இந்தக் கோயிலில், இரண்டாம் ராஜராஜன் உள்ளிட்டப்பல்வேறு சோழ மன்னர்கள் கால கல்வெட்டுகளும் இடம்பெற்றுள்ளன.

அதேநேரம் இந்து அறநிலையத்துறைக்குச்சொந்தமான இந்த கோயிலில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நிறைவடையாமல் உள்ளன. இதனால் கோயில் முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருவதாக பக்தர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

மயிலாடுதுறை: 1,000 ஆண்டுகள் பழமையான வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில் மேற்கூரை இடிந்தது

இந்த நிலையில் நேற்று (அக் 9) மாலை பெய்த கனமழை காரணமாக, கோயிலில் உள்ள கால சம்ஹார மூர்த்தி சந்நிதியின் மேற்கூரை மண்டபகாரைகள் திடீரென்று இடிந்து கீழே விழுந்தது. அப்போது இரவுநேரம் என்பதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் பாரம்பரியமிக்க இந்த கோயிலை புதுப்பித்து உடனடியாக திருப்பணிகளைத்தொடங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாளையங் கோட்டை வாசல்களுக்கு உயிரூட்டப்பட்டது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.