மயிலாடுதுறை: கல்லூரி மாணவி ஒருவர் தான் பள்ளியில் பயின்ற போது, தனக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக வெள்ளிக்கிழமை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இவர் அப்பள்ளியில் 2010ஆம் ஆண்டு 2018ஆம் ஆண்டு வரை படித்தவர் ஆவார். இந்த புகாரின் அடிப்படையில், அரசு உதவிபெறும் டிபிடிஆர் தேசிய மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரையை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கடந்த மூன்று நாள்களாக அண்ணாத்துரையிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்ணாதுரை கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து, மேலும் 2 மாணவிகள் அவர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளனர்.
அம்மாணவிகளில் ஒருவர் 2010ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையும், மற்றொருவர் 2008ஆம் ஆண்டுமுதல் 2011ஆம் ஆண்டு வரையும் அப்பள்ளியில் படித்துள்ளனர். இதையடுத்து, அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் அண்ணாதுரையை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ!