ETV Bharat / state

மயிலாடுதுறையில் உலக புகழ்வாய்ந்த துலா உற்சவ தீர்த்தவாரி - மாயூரநாதர் திருக்கோவில்

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தின் தொடக்கமாக சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் துலாக்கட்ட காவிரியில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.

உலக புகழ்வாய்ந்த துலா உற்சவம் முதல் தீர்த்தவாரி நடைபெற்றது

author img

By

Published : Oct 18, 2022, 4:33 PM IST

மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி முதலான புண்ணிய நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.

அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. சிவாலயங்களில் இருந்து சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டு துலாக்கட்ட காவிரியில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று ஐப்பசி மாதம் 1ஆம் தேதி துலா உற்சவம் தொடங்கியது.

இதனை முன்னிட்டு இன்று ஐய்யாரப்பர், வதான்யேஸ்வரர், காசிவிஸ்வநாதர், உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு துலாக்கட்ட காவிரியின் இரு கரைகளில் அஸ்திர தேவர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.

இதில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதீனம் 28வது குருமா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சரிய சுவாமிகள், உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

உலக புகழ்வாய்ந்த துலா உற்சவம் முதல் தீர்த்தவாரி நடைபெற்றது

தொடர்ந்து மகாதீபாரதனை நடைபெற்றது. மாயூரநாதர் திருக்கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறுவதால் துலா உற்சவ நிகழ்ச்சியில் சுவாமி புறப்பாடு நடைபெறவில்லை.

இதையும் படிங்க: ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு ரூ.64 லட்சம் உண்டில் காணிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.