மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரையில் விசாலாட்சி சமேத படித்துறை விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட இந்த கோயிலில் இரவு நேர காவலராக செங்கமேட்டுத்தெருவை சேர்ந்த சாமிநாதன் (55) என்பவர் கோயிலிலேயே தங்கி பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், மே 9ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இந்த கோயிலின் சுவர் ஏறி குதித்து உண்டியலில் பணம் திருட முயன்றுள்ளார். அதற்கு முன்னதாக காவலாளி சாமிநாதனை கொடூரமாக தாக்கியுள்ளார்.
அதன் பின் உண்டியல், சாமி சன்னதியில் இருந்த பீரோவை திறந்துபார்த்தார் அதில் பணம், நகைகள் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து அங்கிருந்து தப்பியோடினர்.
படுகாயம் அடைந்த சாமிநாதன் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை காவல்துறையினர் தப்பியோடிய நபரை தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும் கோயில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.