நாகப்பட்டினம், பேருந்து நிலையம் அருகே, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையினை கண்டித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில்,புதிய கல்விக் கொள்கையின்படி பல பள்ளிகளை ஒருங்கிணைத்து, கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்களின் கல்விக்கு கேடு விளைவிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கூறினர்.
மேலும்-மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு தகுதித் தேர்வு நடத்துவதையும், பத்தாம் வகுப்பு முடித்தவுடன் தேசிய நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே கல்லூரிகளில் சேர முடியும் என்பதையும் முற்றிலும் கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
குலக் கல்வித் திட்டத்தோடு இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிக்கும் முயற்சியை நிறுத்த வேண்டும் எனவும் தமிழ்நாட்டில், இரு மொழிக் கொள்கையே நீடிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நாகப்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.