நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வாணகிரி பகுதியில் அரசு மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் மதுபானக் கடையின் சுவரை துளையிட்டு உள்ளே சென்று பீர் பாட்டில்கள் 100, குவாட்டர் பாட்டில்கள் 200 உள்ளிட்டவற்றை வெளியே எடுத்து போட்டு உடைத்துள்ளனர்.
அதன்பின், கடையினுள் இருந்த சிசிடிவி கேமராவை உடைத்து, பதிவு செய்யும் காட்சிகளை சேகரிக்கும் ஹாட்டிஸ்கை எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மதுபானக் கடைக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று காலை, வழக்கம் போல் கடையை திறப்பதற்காக கடை ஊழியர்கள் வந்துள்ளனர். அப்போது, மதுபான கடையின் சுவரில் துளையிட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பூம்புகார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்து மதுபான கடை துளையிட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
சுவற்றில் துளையிட்டு ரூ.70ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு!