ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மது விற்பனை முடங்கியுள்ளது. அதனால் பல்வேறு டாஸ்மாக் கடைகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள 13 டாஸ்மாக் கடைகள் காலி செய்யப்பட்டன.
அந்தப் 13 கடைகளும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதால் பாதுகாப்பு குறைவு என்றும், அதன் காரணமாக காலி செய்யப்பட்டதாகவும் டாஸ்மாக் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். அங்கிருந்து காலி செய்யப்பட்ட மது பாட்டில்கள் அனைத்தும் சீர்காழியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அதற்குக் காவலர்கள் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடையை திறந்து மதுபாட்டில்களை கடத்த முயன்ற 4 பேர் கைது!