நாகப்பட்டினத்தை அடுத்துள்ள சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள், நாகை ஆரிய நாட்டுத்தெரு மீனவர்கள் 23 பேர் என மொத்தம் 32 பேர் மூன்று விசைப்படகுகளில் கேரள மாநிலம், கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில் கேரளா அருகே டவ் தே புயலில் சிக்கி, நடுக்கடலில் படகு மூழ்கியதில் 9 மீனவர்கள் மாயமானார்கள். காணாமல்போன மீனவர்கள் மீட்கப்படாத காரணத்தால், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் இரண்டு படகில் சென்ற 23 மீனவர்கள் இன்று (மே.30) நாகப்பட்டினம் துறைமுகம் வந்து சேர்ந்தனர்.
அவர்களை மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். மாயமான மீனவர்களைத் தேடும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வரும் நிலையில், கடலில் தத்தளித்த தங்களுக்கு கரை திரும்ப, தமிழ்நாடு மீன்வளத்துறை அலுவலர்கள் எந்த உதவியும் செய்யாமல் அவதூறாகப் பேசியதாக, மீனவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் 9 மீனவர்களைத் தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பராமரிப்பு: கண்காணிக்கும் பொறுப்பை குழந்தை பாதுகாப்புக் குழுக்கள் வசம் ஒப்படைக்க வலியுறுத்தல்