ETV Bharat / state

தமிழ்நாடு மீன்வள பல்கலையில் இடங்கள் அதிகரிப்பு - துணைவேந்தர் அறிவிப்பு - vice chariman

நாகை: "தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று, துணைவேந்தர் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.

துணைவேந்தர் பெலிக்ஸ்
author img

By

Published : May 17, 2019, 5:19 PM IST

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டு இளங்கலை மீன்வள அறிவியல் (B.F.Sc) பட்டப் படிப்பிற்கு 160 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு B.Tech., இளநிலை மீன்வள மாலுமி கலை தொழில்நுட்பவியல், BBA., இளநிலை வணிக நிர்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை), இளநிலை ஆற்றல், B.Tech., E.E.E., சுற்றுச்சூழல் பொறியியல் ஆகிய மூன்று பாடப்பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பெலிக்ஸ் கூறுகையில், "மீன்வளத்துறை சார்ந்த பாடத்திட்டங்கள் அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்பதால் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு மாணவர்கள் மத்தியில் பெரும் போட்டி நிலவுகிறது. பிஎஸ்சி, பி.டெக்., பி.பி.ஏ., படிப்புகளுக்கு சேர்வதற்கு ஆன்லைனில் www.tnjfu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் மே 31 ஆம் தேதிக்குள் மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்" என்றார்.

துணைவேந்தர் பெலிக்ஸ்

தொடர்ந்து பேசிய அவர்,"இது குறித்த விவரங்களை பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். மாணவர்களின் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல், ஜூன் இரண்டாவது வாரம் வெளியிடப்பட்டு, ஜூலை இரண்டாவது வாரத்தில் நேரடியாக கலந்தாய்வு நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

Intro:தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிப்பு: புதியதாக துவங்கப்பட்டுள்ள 3 பட்டப்படிப்புகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு, பல்கலைக்கழகம் அழைப்பு:

Body:தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிப்பு: புதியதாக துவங்கப்பட்டுள்ள 3 பட்டப்படிப்புகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு, பல்கலைக்கழகம் அழைப்பு:

தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பயில்வதற்காக, நாகப்பட்டினம், தூத்துக்குடி, பொன்னேரி

ஆகிய 3 இடங்களில் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில்  4 ஆண்டு இளங்கலை மீன்வள அறிவியல் (B.F.Sc) பட்டப் படிப்பிற்கு 160  இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு B.Tech.,இளநிலை மீன்வள மாலுமி கலை தொழில்நுட்பவியல் , BBA., இளநிலை வணிக நிர்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை)  இளநிலை ஆற்றல் மற்றும். B.Tech.,E E E., சுற்றுச்சூழல் பொறியியல் ஆகிய மூன்று பாடப்பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இன்று நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பெலிக்ஸ் கூறியதாவது, மீன்வளத்துறை சார்ந்த பாடத்திட்டங்கள் அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்பதால் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு மாணவர்கள் மத்தியில் பெரும் போட்டி நிலவுகிறது. பி.ஃ.எஸ்சி,  பி.டெக்., பி.பி.ஏ., படிப்புகளுக்கு சேர்வதற்கு ஆன்லைனில் www.tnjfu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் மே 31ஆம் தேதிக்குள் மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்றார். மேலும் விவரங்களை பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் என்றும்,   மாணவர்களின் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் ஜூன் இரண்டாவது வாரம் வெளியிடப்பட்டு, ஜூலை இரண்டாவது வாரத்தில் நேரடியாக கலந்தாய்வு நடத்தப்படும் என துணைவேந்தர் பிலிக்ஸ் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.