ETV Bharat / state

"அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாடு தற்போது புரட்டிப் போடப்பட்டுள்ளது "- ஓ.எஸ்.மணியன்

author img

By

Published : Aug 9, 2022, 10:09 AM IST

அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாடு தற்போது புரட்டிப் போடப்பட்டுள்ளது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இது ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரிய கேவலம் என கூறினார்.

அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாடு தற்போது புரட்டிப்  போடப்பட்டுள்ளது என்று நீதிபதி கூறுவது கேவலம்

மயிலாடுதுறை: கொள்ளிடம் ஒன்றியத்தில் அதிமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், "99.5 சதவீதம் அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தனர். இதனால் பயந்த ஸ்டாலினுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 13 கட்சி கூட்டணியுடன் 450 கோடி செலவில் வடநாட்டு அரசியல் ஆலோசனை கொண்டு பொய்யான 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை சொல்லி 3% வாக்குகள் அதிகம் பெற்று திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.

மாறாக வெற்றி வாய்ப்பை இழந்த போதிலும் 75 சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு அழைத்து சென்றவர் எடப்பாடி பழனிசாமி . மக்களுக்கு விரோதமான அரசு திமுக அரசு. கொடுத்த வாக்குறுதிகளில் 80% நிறைவேற்றி விட்டோம் என பொய் சொல்லுகிற திமுக அரசு தேர்தல் வாக்குறுதியான நீட் தேர்வு ரத்து, தாலிக்கு தங்கம், உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டினார்.

அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாடு தற்போது புரட்டிப் போடப்பட்டுள்ளது என்று நீதிபதி சொல்வது மிகப்பெரிய கேவலம் என விமர்சனம் செய்தார். கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி இறப்பில் ஏற்பட்ட கலவரத்திற்கு காவல்துறை இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த ஆட்சியில் குட்கா பாக்கெட்டுடன் ஸ்டாலின் சட்டசபைக்கு வந்தார். ஆனால் தற்போது திமுக ஆட்சியில் நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட சமூக சீர்கேடு தலைவிரித்து ஆடுகிறது என்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூர்த்தி, சந்திரமோகன், சக்தி, உள்ளிட்ட அதிமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இருந்து 30க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இதையும் படிங்க: 1330 திருக்குறள்களுக்கு 12 மணிநேரம் இடைவிடாது நடனமாடிய 50 பரதக்கலைஞர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.