நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினத்தில், தமிழ் மாநில சித்த மருத்துவக் கழகத்தின் சார்பாக, வளர் இளம் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும், அதற்கு நமது பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் தீர்வு காண்பது குறித்தும் கருத்தரங்கம் நடைபெற்றது.
சித்த மருத்துவ மாநிலத் தலைவர் ரவீந்திரன் தலைமையில் இக்கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும் அவற்றிலிருந்து, தங்களை காத்துக்கொள்வது பற்றியும்; மேலும், சித்த மருத்துவத்தில் உள்ள மூலிகைகளின் அவசியம் குறித்தும், மூலிகை வைத்தியர் தேவூர் மணிவாசகம் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து இந்நிகழ்வில், புதுச்சேரி அகில இந்திய வானொலி பொறுப்பாளர் செந்தில்குமார் கலந்து கொண்டு பார்வையாளர்களுக்கு திருக்குறள் புத்தகத்தை வழங்கினார். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான வளரும் இளம் பெண் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்: 26 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்