தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி அதிகமான வெப்பத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். இதிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டுமென அதிமுக கழக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நீர், மோர் பந்தல் அமைக்க அறிவுறுத்தினர்.
அதன்படி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அதிமுக தேர்தல் அலுவலகத்தில் சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட அவைத்தலைவருமான பி.வி. பாரதி நீர் மோர் பந்தலைத் திறந்துவைத்தனர்.
பின்னர் பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி, இளநீர் போன்றவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 30-39 வயதினரைக் குறிவைக்கும் கரோனா